நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் ஆஜராக உத்தரவு.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ், வரும் 22 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 196-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் அண்ணாமலை, மிகக்குறைவான அளவில் சொத்து வரி செலுத்தி வருவதாகவும், முறையான வரியை வசூலிக்க அரசுக்கு உத்தரவிடவும் ஈஞ்சம்பாக்கம் பொன். தங்கவேல் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை தொடர்ந்த பொன். தங்கவேலுக்கு மிரட்டல்கள் வந்ததால், போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், தனக்கு பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்று கூறி சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ்-க்கு எதிராக தங்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, தங்கவேலுவுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என கூடுதல் அட்வகேட் ஜெனரல் கூறியதை ஏற்க மறுத்த நீதிபதி, நீதிமன்றம் என்ன பாவ பூமியா? ஆஜராவதில் கவுரவப் பிரச்சனை இருக்கிறதா? எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும் உயர் அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நேரிட்டால் அந்த வழக்கில் ஆஜராகும் அரசு வழக்கறிஞரின் பதவி பறிபோகும் சூழல் உள்ளதாக நீதிபதி தெரிவித்தார். ஜார்ஜ் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ள இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் பதவிக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் நீதிபதி கிருபாகரன் எச்சரித்தார். இன்று காலை தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வெங்கட்ரமணி ஆஜாராகி ஆணையர் ஜார்ஜ் வரும் 22 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாக கூறினார். இதனை ஏற்று அன்றைய தினம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.