ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக என். மருதுகணேஷ் அறிவிப்பு.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் என்.மருதுகணேஷ் (42) தற்போது ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி திமுக பொறுப்பாளராக உள்ளார்.

பழைய வண்ணாரப்பேட்டை, ஆரணி ரங்கன் தெருவில் வசித்து வரும் இவரது தந்தை நாராயணசாமி. தாயார் பார்வதி 42-வது வார்டு மாமன்ற உறுப்பினராகவும், மகளிர் அணி மாவட்டத் துணை செயலாளராகவும் இருந்துள்ளார். பி.காம், எம்.ஏ.(இதழியல்), எல்.எல்.பி. படித்துள்ள மருதுகணேஷ் வழக்குரைஞராகவும், தினகரன் பத்திரிகையில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேர செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி கவிதா, பூமாலை என்ற மகளும், தனுஷ் மகனும் உள்ளனர். மருதுகணேஷ் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதும், மனைவி கவிதா வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதும், இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.