தில்லியில் தமிழக விவசாயிகள் இருவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு.

நாடு முழுவதும் நிகழும் விவசாயிகள் தற்கொலையைத் தடுக்கக் கோரி, தேசிய - தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தில்லி ஜந்தர் மந்தரில் புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இரு விவசாயிகள் தற்கொலைக்கு முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்; அனைத்து நதிகளையும் நீர்வழிப் பயணத் திட்டத்தின் வாயிலாக இணைக்க வேண்டும்; விவசாய விளைபொருள்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி பி. அய்யாக்கண்ணு தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தில்லியில் பிரதமர் வீடு அருகே செவ்வாய்க்கிழமை மேல் சட்டை இல்லாமல் அரை நிர்வாண கோலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இரண்டாவது நாளாக ஜந்தர் மந்தர் சாலையில் புதன்கிழமை மண்டை ஓடுகளை அணிந்து, அரை நிர்வாணத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காலை 10.45 மணி அளவில் திருச்சியைச் சேர்ந்த விவசாயிகள் அகிலன், ரமேஷ் ஆகிய இருவரும் அருகில் உள்ள மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றனர்.
இதையடுத்து, காவல் துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து, மரத்தில் ஏறிய இருவரையும் பத்திரமாக மீட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தில்லி காவல் துறை அதிகாரிகள் தற்கொலைக்கு முயன்ற விவசாயிகளையும், அமைப்பினரையும் எச்சரித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தேசிய - தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ. அய்யாக்கண்ணு கூறுகையில், 'காவல் துறையினரின் வாக்குறுதியின் பேரில் நிதியமைச்சகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு இணைச் செயலாளரை சந்தித்தேன். நிதியமைச்சரைச் சந்திக்க முறையாக அனுமதி பெற்று வருமாறும், கோரிக்கை அளித்துச் செல்லுமாறும் அவர் தெரிவித்தார். இருப்பினும் எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்' என்றார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.