சென்னை-பாண்டிச்சேரி இடையே கடல்வழி சரக்குப் போக்குவரத்து: அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் ஒப்பந்தம்.

சென்னை-பாண்டிச்சேரி இடையே கடல்வழி சரக்குப் போக்குவரத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்த் துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் புதன்கிழமை புதுடில்லியில் கையெழுத்தானது.

பொருளாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவைகளைக் கருத்தில் கொண்டு கடல்வழியான உள்நாட்டு சரக்குப் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில் சாகர்மாலா என்ற சிறப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி இந்திய பெருந்துறைமுகங்களை நாட்டின் இதர சிறிய துறைமுகங்களுடன் இணைப்பது,

கடலோர பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்துவது போன்ற சிறப்புத் திட்டங்கள் இதில் அடங்கியுள்ளன.

இதன் ஒரு பகுதியாக சென்னை துறைமுகமும், பாண்டிச்சேரி துறைமுகமும் இணைந்து செயல்படும் சிறப்புத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுடில்லியில் புதன்கிழமை கையெழுத்தானது. சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்த் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இணை அமைச்சர் முகுந்த் எல்.மாண்டவியா, புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி முன்னிலையில் சென்னைத் துறைமுகத் தலைவர் பி.ரவீந்திரன், புதுச்சேரி அரசின் தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா

ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அப்போது அமைச்சர் கட்கரி பேசியது,

இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வருவதன் மூலம், பாண்டிச்சேரி துறைமுகத்தின் சரக்குப் போக்குவரத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் சென்னைத் துறைமுகம் செய்து தரும். மேலும் இரு துறைமுகங்களுக்கிடையே உள்நாட்டு, வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டிய சரக்குகள் கடல்வழியே எடுத்து வரப்படும்.

இதன்மூலம் சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், நாகபட்டனம், திருச்சி, சேலம், நாமக்கல், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய சரக்குகள் பாண்டிச்சேரி துறைமுகம் வழியாகக் கொண்டு செல்லப்படும். இதனால் சாலை போக்குவரத்து நெரிசல், சுற்றுசூழல் பாதிப்பு குறையும், மேலும் பாண்டிச்சேரி துறைமுகமும் படிப்படியாக வளர்ச்சி பெறும். மேலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தொழில்துறை வளர்ச்சி ஏற்பட்டு வேலை வாய்ப்பு பெருகும் என்றார் கட்கரி.

புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து சரக்குகளைக் கையாள்வதற்கான கடல்வழி வாணிபச் சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வறிக்கை விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.