திட்டமிட்டபடி இன்று முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்.

தென் மாநிலங்களில் ஏற்கெனவே அறிவித்தபடி வியாழக்கிழமை (மார்ச் 30) காலை 6 மணி முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்குகிறது.
இதனால் தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் 15 லட்சம் லாரிகள் ஓடாது என, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனச் செயலர் தன்ராஜ் தெரிவித்தார்.
காப்பீட்டுப் பிரீமியம் கட்டண உயர்வு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வு போன்றவற்றை கண்டித்து தென் மாநிலங்களில் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்குகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கட்டுப்பாட்டில் உள்ள 90-க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். சரக்கு முன்பதிவு முகவர்களும் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து, புதன்கிழமை முதல் லாரிகளுக்கு சரக்கு முன்பதிவு செய்வதை நிறுத்திவிட்டனர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை புது தில்லியில் மத்திய தரைவழி போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில், காப்பீட்டு பிரீமியம் உடனடியாக உயர்த்தப்பட மாட்டது, லாரி உரிமையாளர்களிடம் கருத்துக் கேட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும். 15 ஆண்டுக்கு மேல் உள்ள வாகனங்களை காலாவதி ஆக்காமல் இயக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
ஆனால், இந்த கோரிக்கைகளை தவிர்த்து மாநில அரசுக்கான கோரிக்கைகள் உள்ளதாகவும், அந்த கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு இதுவரை சம்மேளன நிர்வாகிகளை அழைத்துப் பேசவில்லை. இதனால் போராட்டம் தவிர்க்க முடியாததாகி விட்டது என்று சம்மேளன நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனச் செயலர் தன்ராஜ் கூறியது:
டீசல் மீதான வாட் வரி உயர்வு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு, பழைய வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது போன்றவற்றை மாநில அரசு திரும்பப் பெறும் வரை லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்.

இதுபோல் ஆந்திரம், கேரளம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி தொடங்குகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 4.25 லட்சம் லாரிகள், 5 மாநிலங்களிலும் சுமார் 15 லட்சம் லாரிகள் இயங்காது என்றார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.