சிட்லபாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகள் : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு.

சிட்லபாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015 மழை காலத்தில் சிட்லப்பாக்கம் ஏரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு விதிமீறி கட்டப்பட்ட கட்டுமானங்களே காரணம் என தொடரப்பட்ட வழக்கில் ஏரியை சுற்றி புதிய கட்டுமானங்கள் கட்ட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இன்றைய விசாரணையின்போது தமிழக அரசின் பதில் மனுவில், ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.