வைகோவையும் மருத்துவர் ராமதாசையும் உறவுக்காரர்களாக மாற்றிய திருமணம்!

கலிங்கப்பட்டி: அரசியலில் எதிர் எதிர் துருவங்களில் நின்று செயல்பட்டு வந்தாலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும், பாமக நிறுவனரான ராமதாசையும் திருமணம் ஒன்று உறவுக்காரர்களாக மாற்றியுள்ளது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவின் தம்பி வை. ரவிச்சந்திரன். ராமச்சந்திரனின் மூன்றாவது மகன் மகேந்திர வையாபுரி. இவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் இரா. கிருஷ்ணசாமி அவர்களின் கொள்ளுப்பேத்தியான ப்ரீத்திக்கும் இன்று காலை கலிங்கப்பட்டியில் திருமணம் நடந்தது.

இந்த கிருஷ்ணசாமியின் மகள்தான் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌம்யா. அந்த வகையில் ராமதாஸுக்கு மணமகள் ப்ரீத்தி பேத்தி முறை வருகிறது.

இந்த திருமண நிகழ்வில் ஏராளமான அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர். விழாவில் வைகோவும் கலந்து கொண்டார்.

அடுத்த தலைமுறையின் இந்த திருமண பந்தத்தின் மூலம் வைகோவும் டாக்டர் ராமதாசும் தற்போது உறவினர்களாக மாறியுள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.