ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் 706 கேரட் வைரம் தோண்டியெடுப்பு.

ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் (Sierra Leone), உலகின் மிகப்பெரிய வைரங்களில் 10ஆவது இடத்தை பிடிக்கக்கூடிய அளவில், 706 கேரட் வைரம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. மேற்குஆப்பிரிக்க நாடான சியரா லியோன் வைரச் சுரங்கங்கள் நிரம்பிய நாடாகும். இங்கு 1991 முதல் 2002ஆம் ஆண்டுவரை நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது, 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பெரும்பாலும் வைரங்களை முறைகேடாக தோண்டியெடுத்து, அவற்றை விற்றுக் கிடைக்கும் வருவாய் இந்த உள்நாட்டுப் போருக்கான நிதியுதவியாக அமைந்தது. எனவே சியரா லியோனில் இருந்து கடத்தப்பட்ட வைரங்களை “ரத்த வைரங்கள்” என்று குறிப்பிடுவது உண்டு. தற்போது அமைதி திரும்பியுள்ள நாடாக உள்ள சியரா லியோனில், அரசின் அனுமதி பெற்று சாதாரண குடிமக்களும் வைரங்களை தோண்டியெடுக்கின்றனர். அந்த வகையில், சுரங்கம் தோண்டுவதற்கான பெரிய கருவிகளோ பின்புலமோ இல்லாத எம்மானுவேல் மோமோ ((Emmanuel Momoh)) என்பவர், கோனோ ((Kono)) என்ற பகுதியில் 708 கேரட் வைரம் ஒன்றை தோண்டியெடுத்துள்ளார். இது, உலகின் மிகப்பெரிய வைரங்களில் 10ஆவது இடத்தைப் பிடிக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 25 கேரட் வைரம் என்பது தோராயமாக 12 கோடி ரூபாய் அளவிற்கு விலைபோகிறது. இந்த 706 கேரட் வைரத்திற்கு இன்னும் விலை நிர்ணயிக்கப்படவில்லை.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.