பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி ரூ.4 லட்சம் கோடியை எட்டும்: நிர்மலா சீதாராமன்.

நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி நடப்பு நிதி ஆண்டில் ரூ.4 லட்சம் கோடியை எட்டும் என வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார். இதுகுறித்து அவர் வியாழக்கிழமை மேலும் தெரிவித்ததாவது:

கடந்த 2015-இல் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி ரூ.3.23 லட்சம் கோடியாக இருந்தது. நடப்பு 2016-17 நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான கால அளவில் பொறியியல் சாதன ஏற்றுமதி ரூ.3.40 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க சந்தையில் இந்திய பொறியியல் சாதனங்களுக்கான தேவை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக நடப்பு நிதி ஆண்டில் இவற்றின் ஏற்றுமதி ரூ.4 லட்சம் கோடியை எட்டும்.

தற்போது ரஷியா மற்றும் இந்தியா இருதரப்பு இடையிலான வர்த்தகம் ரூ.44 ஆயிரம் கோடியாக உள்ளது. அதனை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்றுமதியை ஊக்குவிக்க ஏதுவாக பொறியியல் சாதன உற்பத்தியாளர்கள் நவீன தொழில்நுட்ப வசதியை கையாண்டு உற்பத்தியை அதிகரிக்க வர்த்தக அமைச்சகம் சார்பில் தேவையான பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.