மணல் வரும்படி – மாதம் 45 கோடி – திமுக, விசிக வுக்கும் நிதி உண்டு – ரெட்டி ஒப்புதல் வாக்குமூலம்.

படத்தொகுப்பு
மணல் ரெட்டியின் வீட்டிலும், தொழில் செய்யும்
இடங்களிலும், தலைமைச்செயலர் வீட்டிலும்,
அலுவலகத்திலும் ரெய்டுகள் நடந்து 3 மாதங்கள்
முடிந்து விட்டன…
3 மாதங்கள் முடிந்தும் சார்ஜ் ஷீட் பதிவு செய்யப்படாததால்,
ரெட்டி ஜாமீனில் வெளியே விடப்பட்டு விட்டார்…!
தமிழகத்தில் இத்தனை அரசியல் கட்சிகள் இருக்கின்றனவே,
எந்த கட்சியாவது இந்த வழக்கு என்ன ஆனது என்று
கேட்டிருக்கின்றனவா…?
வழக்கில் தாமதம் ஏன் என்று
எந்த கட்சியாவது கேட்டதா…?
விசாரணை ஏன் விரைவாக நடக்கவில்லை…?
எத்தகைய மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று
முக்கிய எதிர்க்கட்சி கேட்டதா …?
எப்படி கேட்கும்….? யார் கேட்பார்கள்…?
எல்லாருக்குமே நிதி பட்டுவாடா நடக்கும்போது..?
ஆளும் கட்சியைத்தவிர,
திமுக வுக்கும், விசிக வுக்கும் கூட நிதி கொடுக்கிறோம்.
அனைத்து கட்சிகளுக்கும் கொடுப்பது உண்டு. என்று
மணல் ரெட்டி வாக்குமூலம் கொடுத்திருக்கிறாராம்.
மணல் ரெட்டி கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தின்
நகல் தங்களிடம் இருக்கிறது என்று கூறும்
ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள ஒரு
செய்திக்கட்டுரையிலிருந்து சில பகுதிகளை கீழே
தந்திருக்கிறேன்.
படித்துப் பாருங்கள் – நம் நாட்டின் தலையெழுத்து
எப்படி இருக்கிறது என்று புரியும்.
மாநிலத்தில் அதிமுக ஆண்டால் என்ன…?
திமுக வந்தாலென்ன…?
மத்தியில் பாஜக ஆண்டாலென்ன ..?
காங்கிரஸ் ஆண்டாலென்ன…?
யார் ஆட்சியில் இருந்தாலும் –
யார் ஆட்சிக்கு வந்தாலும் –
உண்மையில் இங்கு எப்போதும் நிரந்தரமாக நடப்பது –
(கூட்டு) கொள்ளையர்கள் ஆட்சி தானே..?
—————————
பின் குறிப்பு –
ஜூ.வி.யில் இந்த செய்தி சனிக்கிழமை காலையே
வெளிவந்து விட்டது. இதுவரை, திமுகவோ,
விசிகவோ – இந்த செய்திக்கு மறுப்போ, எதிர்ப்போ
தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
                                    BY: காவிரி மைந்தன்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.