March 2017

நெடுஞ்சாலைகளில் இருந்து மதுக்கடைகள் எவ்வளவு தூரம் இருக்கலாம் என்பது குறித்து உச்சநீதிமன்றம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் அதிகமான விபத்து ஏற்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் உள்ள மதுபான கடைகள், பார்களை மார்ச் 31 ஆம் தேதிக்குள் மூட மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த தொலைவை 100 மீட்டராகக் குறைக்க மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில் 20 ஆயிரம் பேருக்கு கீழ் மக்கள் வசிக்கும் இடங்களில், நெடுஞ்சாலையில் இருந்து 220 மீட்டர் தூரத்தில் மதுக்கடை இடம் பெற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம், முன்பு விதிக்கப்பட்டிருந்த 500 மீட்டர் தூரத் தடை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவில் 220 மீட்டர் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற தமிழக அரசுக்கு விதிக்கப்பட்டிருந்த அவகாசம் இன்றுடன் முடிகிறது. மற்ற மாநிலங்களுக்கு இந்தக் காலக்கெடு செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் அளிக்கப்பட்ட தீர்ப்பில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தொலைவிற்குள் உள்ள மதுபானக்கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு சில்லறை மதுபான கடைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்ற கருத்து இருந்தது. பார்கள், பப்புகளில் மதுபானங்கள் விற்கலாமா என்ற கேள்வி எழுந்தது. தற்போது அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பில் இதனை தெளிவுபடுத்தியுள்ளனர். அதன்படி இந்த 220 மீட்டர் தொலைவிற்குள் சில்லரை மதுக்கடைகள் மட்டுமின்றி, பார்கள், பப்புகள், ஹோட்டல்களில், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட எந்த இடங்களிலும் மதுபானங்களை விற்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு உச்சநீதிமன்றத்தில் ஆஜரான கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் தன்னை தனது பணியை செய்ய விடுங்கள். இல்லையெனில் சிறையில் அடையுங்கள் எனக் கூறினார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய கர்ணன், கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் நாட்டின் 20 நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிரதமருக்கு அவர் கடிதம் எழுதினார். பின்னர் தனது பணி மாற்ற உத்தரவையும் அவரே தடை செய்தார்.

நீதிபதி கர்ணனின் இந்த நடவடிக்கையால் கோபமடைந்த உச்ச நீதிமன்றம், தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது. கர்ணன் நீதிமன்றத்தில் ஆஜராக மறுத்ததால், அவருக்கு எதிராக பிடி வாரண்டும் பிறப்பித்தது.

இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று ஆஜரானார். நீதிபதி கர்ணன் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளாரா என்று கேட்ட நீதிபதிகள், அவரது மனநிலை தெளிவாக இல்லை என்று கூறினர். மேலும், இந்த வழக்கில் அவர் 4 வாரங்களில் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.

நீதிபதிகளுக்கு பதிலளித்த கர்ணன், என்னை எனது பணியை செய்ய விடுங்கள் இல்லையென்றால் அடுத்த முறை நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் எனக் கூறினார். தேவையென்றால் என்னை சிறையில் அடையுங்கள் எனவும் கூறினார்.

இதன் பிறகு, உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகளுக்கு தடை விதித்த கர்ணன், பதிவாளர் அவர்களுக்கு எந்த வேலைகளையும் ஒதுக்க கூடாது எனவும் உத்தரவிட்டார்.

வேலைக்காகத்தான் எல்லாரும் படிக்கிறார்கள். ஆனால், படித்த படிப்பிற்கேற்ற வேலை எங்கே கிடைக்கும் என்பது தெரியாமல் குழப்பத்தில் பல பேர் சிக்கித் தவிப்பதுண்டு. அந்த தவிப்பை குறைப்பதற்கு - அவர்களுக்கு உதவுவதற்கு - வழிகாட்டும்விதமாக எண்ணற்ற இணையதளங்கள் உறுதுணையாகவுள்ளன. அவற்றில் சில:
www.careerbuilder.co.in
www.clickjobs.com
www.placementpoint.com
www.careerpointplacement.com
www.glassdoor.co.in
www.indtherightjob.com
www.employmentguide.com
www.jobstreet.com
www.jobsdb.com
www.ae.timesjobs.com
www.naukrigulf.com
www.naukri.com
www.gulftalent.com
www.bayat.com
www.monster.com
www.velai.net
www.careesma.com
www.shine.com
www.fresherslive.com
www.jobsahead.com
www.babajobs.com
www.wisdom.com
www.indeed.co.in
www.sarkarinaukriblog.com
www.jobsindubai.com
www.jobswitch.in
www.jobs.oneindia.com
www.freshersworld.com
www.freejobalert.com
www.recruitmentnews.in
www.firstnaukri.com
www.freshnaukri.com
www.mysarkarinaukri.com
www.freshindiajobs.com
www.freshersopenings.in
www.freshersrecruitment.in
www.chennaifreshersjobs.com

அரசு வேலைகள் குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ள: 
www.govtjobs.allindiajobs.in
www.timesjobs.com
www.naukri.com
www.tngovernmentjobs.in
www.sarkariexam.co.in
www.govtjobs.net.in
www.indgovtjobs.in

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

வறட்சி நிவாரணத் தொகையை அதிகரிக்க வேண்டும், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 18-ஆவது நாளாக அவர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. மத்திய அமைச்சர்களைச் சந்தித்து பேசியும் எந்த பயனும் இல்லை. பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்யும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நேரில் சந்தித்து பேசினார். விவசாயிகளுடன் உட்கார்ந்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 3 ஆண்டுகளாக விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு தொடர்ந்து தமிழக மக்களுக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்றார். பிரதமர் மோடி விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஒடிசா மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரயில் நிலையம் ஒன்றில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 15 மற்றும் 16ஆம் தேதி ஒடிசாவில் நடைபெறவுள்ள பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மாவோயிஸ்டுகள், ராயகடா மாவட்டத்தில் உள்ள டோய்கலு (Doikalu) ரயில் நிலையத்திற்கு நள்ளிரவில் வந்து, அங்கிருந்த ஊழியர்களை வெளியேற்றிவிட்டு, வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர். மேலும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலின் என்ஜினையும் சேதப்படுத்தினர். பின்னர் கையால் எழுதப்பட்ட போஸ்டர் ஒன்றையும் அவர்கள் ரயில் நிலைய சுவரில் ஒட்டிச் சென்றனர். அதில், பிரதமர் மோடி, முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் அரசுகளின் கொள்கைகளை எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டோய்கலு வழியாக செல்லும் பல்வேறு ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஊழல் புகாரில் சிக்கி பதவியிழந்த தென்கொரிய முன்னாள் பெண் அதிபர் பார்க் ஜியூன்-ஹை இன்று கைது செய்யப்பட்டார். 2012ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தென்கொரியாவின் முதல் பெண் அதிபராகப் பொறுப்பேற்ற பார்க் ஜியூன்-ஹை (Park Geun-hye), பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. சட்டத்திற்கு புறம்பாக எதையும் செய்யவில்லை என்று அதிபர் பார்க் ஜியூன்-ஹை மறுத்த நிலையில், அவரை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு கடந்த டிசம்பரில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, பார்க் ஜியூன்-ஹை-யை அதிபர் பதவியிலிருந்து நீக்கிய தென்கொரிய அரசமைப்புச் சட்ட நீதிமன்றம், ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்நிலையில், இன்று கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, வரும் மே மாதம், புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விமான சேவை இல்லாத 31 புதிய நகரங்களுக்கு இந்த ஆண்டில் விமானப் போக்குவரத்து தொடங்கப்ப உள்ளது. உள்நாட்டு விமான சேவையில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. உள்நாட்டு விமான சேவையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் மலிவு விலையில் விமான சேவை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பயணக் கட்டணமாக ஒரு மணிநேரத்துக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் என்ற கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்பைஸ் ஜெட், அலைன்ஸ் ஏர், ஏர் டெக்கான், ஏர் ஒடிசா, டர்போ மெகா போன்ற 5 விமான நிறுவனங்கள் மூலம் ஏப்ரலில் இருந்து செப்டம்பர் மாதத்திற்குள் இந்த சேவை தொடங்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடுத்த இரு ஆண்டுகளில் 50 விமான நிலையங்களை புதுப்பித்து சிறிய நகரங்களுக்கும் விமான சேவையை தொடங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு மேலும் 5 நாட்கள் கூடுதல் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கூடுதலாக 5 நாட்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க, கூடுதல் கால அவகாசம் வழங்கியுள்ளது.

முன்னதாக, மார்ச் 1-ஆம் தேதியுடன் அவகாசம் முடிவதாகக் கூறப்பட்டிருந்தது.

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்துக்கு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் நாமக்கல்லில் 6 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளர்கள், உற்பத்தி செய்யப்படும் முட்டைகளை 2 நாட்கள் விற்பனைக்கு அனுப்புவதில்லை என்று முடிவு செய்துள்ளனர். நாமக்கல்லில் நாள் ஒன்றுக்கு 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படும் நிலையில், நேற்று, இன்று என இரண்டு நாள் ஆதரவு போராட்டத்தால் தற்போது 6 கோடி முட்டைகள் தேங்கியுள்ளன. நாளை முதல் கோழிப்பண்ணைகளுக்கென உள்ள லாரிகள் மூலம், சத்துணவு திட்டத்திற்காகவும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் வழக்கம் போல் முட்டைகள் அனுப்பி வைக்கப்படும் என்று கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தெற்குச் சூடானில் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட நெல்லை மற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்த 2 தமிழர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்த மிதுன் கணேஷ் (25), குமரி மாவட்டம் திங்கள்சந்தையை சேர்ந்த எட்வர்ட் (40) ஆகியோர் தெற்குச் சூடானில் பெட்ரோலிய நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தனர். அவர்களை இந்த மாதம் 8-ம் தேதி அந்நாட்டில் உள்ள கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றனர். அதே போல பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரையும் சூடான் நாட்டை சேர்ந்த மூன்று பேரையும் கடத்திச் சென்றனர். இவர்களில் சூடான் நாட்டை சேர்ந்தவர்கள் 3 பேரை, அவர்கள் சுட்டுக் கொன்றதால் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் மிதுன் மற்றும் எட்வர்ட் ஆகிய 2 தமிழர்களையும் கிளர்ச்சியாளர்கள் விடுவித்துள்ளனர். சூடானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இத்தகவலை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்க கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா சங்க வளாகத்தில் இன்று காலை நடந்தது. நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், நடிகர்கள் விஜயகுமார், மனோபாலா, பூச்சி முருகன் உட்பட பல நடிகர், நடிகைகள் இதில் கலந்துகொண்டனர்.

கடந்த முறை நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்றது. தலைவராக நாசர் உள்ளார். தேர்தல் வாக்குறுதியில், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டியே தீருவோம் என கூறியிருந்தார். அதன்படி நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று காலை போடப்பட்டது. இதில் நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால், தலைவர் நாசர் உள்ளிட்ட மூத்த நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி படப்பிடிப்பில் இருப்பதால் அவர் பங்கேற்கவில்லை. ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் இன்னும் சற்று நேரத்தில் இதில் பங்கேற்க உள்ளனர்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் பிரச்சனைக்கு தீர்வு காணக் கோரியும், கூடுதல் வறட்சி நிவாரணம் கோரியும் டெல்லியில் 17-வது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக, சென்னை பாரிமுனையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டக் கல்லூரி மாணவர்கள் சுமார் 100 பேர் கல்லூரி வளாகத்திற்கு வெளியே வர முயசித்தபோது போலீசார் தடுப்பரண்களை வைத்து அவர்களை தடுத்தனர். மாணவர்கள் தடுப்புக்களை தாண்டிக் குதித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றதால், காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போலீஸார் வெளியே விட மறுத்ததால், பதாகைகளை ஏந்திக் கொண்டு மெட்ரோ ரயில் சுற்றுச் சுவர் மீது ஏறி, ஆபத்தான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உணவுக்குத் தேவையான அரிசியை விளைவித்துத் தரும் விவசாயிகளுக்காகபோராட வேண்டும் என்ற எண்ணத்துடன் களத்துக்கு வந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். மத்திய அரசு, விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
பாரிமுனை பூக்கடை காவல் துணை ஆணையர் சஷாந்த் சாய் பேச்சுவார்த்தை நடத்தியும் மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டனர். போக்குவரத்து பாதிக்காதபடி சாலையில் அமர்ந்து போராட காவல்துறை அனுமதி அளித்ததை அடுத்து, குறளக சந்திப்பு சாலையில் அமர்ந்து சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

மகாகவுசல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்ட விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உத்தரப்பிரதேச மாநில அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரிலிருந்து நிஜாமுதீன் சென்ற அந்த ரயில், உத்தரப்பிரதேச மாநிலம் மகோபா (Mahoba) என்ற இடத்தில் தடம்புரண்டது. இதனால் ரயிலில் தூக்கத்திலிருந்த 52 பேர் காயமடைந்தனர். மீட்கப்பட் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். 10 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்தின் காரணமாக, அவ்வழியே செல்லும் 14 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. இதனிடையே சேதமடைந்த தண்டவாள பாகங்கள் சீரமைக்கப்பட்டன. விபத்து குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் அளிக்கப் படுமென சுகாதாரத்துறை அமைச்சர் சித்தார்த் நாத் சிங் அறிவித்துள்ளார்.

படத்தொகுப்பு
மணல் ரெட்டியின் வீட்டிலும், தொழில் செய்யும்
இடங்களிலும், தலைமைச்செயலர் வீட்டிலும்,
அலுவலகத்திலும் ரெய்டுகள் நடந்து 3 மாதங்கள்
முடிந்து விட்டன…
3 மாதங்கள் முடிந்தும் சார்ஜ் ஷீட் பதிவு செய்யப்படாததால்,
ரெட்டி ஜாமீனில் வெளியே விடப்பட்டு விட்டார்…!
தமிழகத்தில் இத்தனை அரசியல் கட்சிகள் இருக்கின்றனவே,
எந்த கட்சியாவது இந்த வழக்கு என்ன ஆனது என்று
கேட்டிருக்கின்றனவா…?
வழக்கில் தாமதம் ஏன் என்று
எந்த கட்சியாவது கேட்டதா…?
விசாரணை ஏன் விரைவாக நடக்கவில்லை…?
எத்தகைய மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று
முக்கிய எதிர்க்கட்சி கேட்டதா …?
எப்படி கேட்கும்….? யார் கேட்பார்கள்…?
எல்லாருக்குமே நிதி பட்டுவாடா நடக்கும்போது..?
ஆளும் கட்சியைத்தவிர,
திமுக வுக்கும், விசிக வுக்கும் கூட நிதி கொடுக்கிறோம்.
அனைத்து கட்சிகளுக்கும் கொடுப்பது உண்டு. என்று
மணல் ரெட்டி வாக்குமூலம் கொடுத்திருக்கிறாராம்.
மணல் ரெட்டி கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தின்
நகல் தங்களிடம் இருக்கிறது என்று கூறும்
ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள ஒரு
செய்திக்கட்டுரையிலிருந்து சில பகுதிகளை கீழே
தந்திருக்கிறேன்.
படித்துப் பாருங்கள் – நம் நாட்டின் தலையெழுத்து
எப்படி இருக்கிறது என்று புரியும்.
மாநிலத்தில் அதிமுக ஆண்டால் என்ன…?
திமுக வந்தாலென்ன…?
மத்தியில் பாஜக ஆண்டாலென்ன ..?
காங்கிரஸ் ஆண்டாலென்ன…?
யார் ஆட்சியில் இருந்தாலும் –
யார் ஆட்சிக்கு வந்தாலும் –
உண்மையில் இங்கு எப்போதும் நிரந்தரமாக நடப்பது –
(கூட்டு) கொள்ளையர்கள் ஆட்சி தானே..?
—————————
பின் குறிப்பு –
ஜூ.வி.யில் இந்த செய்தி சனிக்கிழமை காலையே
வெளிவந்து விட்டது. இதுவரை, திமுகவோ,
விசிகவோ – இந்த செய்திக்கு மறுப்போ, எதிர்ப்போ
தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
                                    BY: காவிரி மைந்தன்.


கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக கப்பம் கட்டி வருகிறோம்.
இந்தியாவை சுத்தப்படுத்த – மத்திய அரசுக்கு…!

பலர் மறந்திருப்பார்கள் – பலர் கவனித்திருக்க
மாட்டார்கள்… நாம் கொடுக்கும் ஒவ்வொரு service tax
bill -உடனும், அரை பெர்செண்ட் ஸ்வச்ச பாரத்துக்கும்,
அரை பெர்சண்ட் பிரதமரின் கரீப் கல்யாணத்திற்கும்
சேர்த்து வரி வசூலிக்கப்படுவதை…!

இந்த வரிப்பணம் அத்தனையும் எப்படி, எங்கே, யாருக்காக
செலவழிக்கப்படுகிறது…?
நமக்குத் தெரிந்தது – 20,000 கோடி ரூபாய், பிரதமரின்
வாரணாசி தொகுதியில் ஓடும் கங்கையை சுத்தப்படுத்த….
இதற்காகவே ஒரு மத்தியமந்திரி சம்பளம் கொடுத்து
அமர்த்தப்பட்டு, அவரும் அங்கேயே “டேரா” போட்டு உட்கார்ந்திருக்கிறார் –
இந்த பணத்தை செலவழிக்கவென்றே…!

இந்தியாவில் பிரதமரின் தொகுதி மட்டும் தான்
“ஸ்வச்ச” செய்யப்பட வேண்டிய தொகுதியா…?

வரியாக வசூலிக்கப்படும் பணம் எல்லா மாநிலங்களிலும்
ஓடும் ஆறுகளை சுத்தப்படுத்த செலவழிக்கப்படுவது
தானே நியாயம்….?

தமிழகத்தில் ஓடும் முக்கிய ஆறுகளை சுத்தப்படுத்த
வேண்டாமா…? அதற்கு நிதி ஏதும் ஒதுக்கப்படாதது ஏன்..?

திருச்சியில், காவிரி ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில்
ஆர்வத்துடன் ஈடுபட்டிருக்கும் “தண்ணீர் இயக்கம்” பற்றிய
செய்திக் கட்டுரை ஒன்றை பார்த்தேன்..(கீழே தந்திருக்கிறேன்..)
எங்கள் ஊர் என்பதால் தனி ஆரவம்……

இந்த இயக்கத்தினர், ஆர்வத்துடன் குப்பைகளை அள்ளலாம்
தூய்மையாக வைத்திருக்க பிரச்சாரம் செய்யலாம்…
ஆனால், காவிரி நாசமாவதன் முக்கிய காரணம் என்ன…?

மேல சிந்தாமணியிலும், ஓயாமரியிலும் “கடல்” போல்,
வந்து காவிரியில் கலக்கும் “கழிவு சாக்கடைகள்” தான்….

இந்த கடும் கோடையில் கூட நீங்கள் போனால் பார்க்கலாம் –
காவிரியின் தென் கரையில் (சாக்கடை) நீர்
ஓடிக்கொண்டிருப்பதை….. இந்த சாக்கடை நீர் காவிரியாற்றில்
கலப்பதை தடுக்காத வரையில், காவிரி எப்படி சுத்தமாகும்…?

இந்த இயக்கத்தினரால் அந்த விஷயத்தில் என்ன செய்ய
முடியும்…? திருச்சி மாநகராட்சியும், தமிழக அரசும் தான்
இதற்கு விடை காண முடியும்… மத்திய அரசு வசூலிக்கும்
“ஸ்வச்ச வரி”யிலிருந்து தமிழகத்திற்கும் ஒரு பங்கை பெற்று,
அதை தமிழக ஆறுகளை சுத்தப்படுத்துவதற்காக
செலவழிக்க வேண்டும்.  இந்த இயக்கத்தினரும்,
மற்ற ஊர்களில் நீர் வளத்தை பாதுகாக்க செயல்படும்

இயக்கத்தினரும் ஒன்றிணைந்து ,
“ஸ்வச்ச” வரியிலிருந்து இந்தியாவின் அனைத்து
ஆறுகளையும் சுத்தப்படுத்த நிதி ஒதுக்க உரிய முறையில்
மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

                                   
BY : காவிரி மைந்தன்.

சிட்லபாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015 மழை காலத்தில் சிட்லப்பாக்கம் ஏரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு விதிமீறி கட்டப்பட்ட கட்டுமானங்களே காரணம் என தொடரப்பட்ட வழக்கில் ஏரியை சுற்றி புதிய கட்டுமானங்கள் கட்ட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இன்றைய விசாரணையின்போது தமிழக அரசின் பதில் மனுவில், ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தீவிரவாதிகளுடன் சண்டை நடக்கும் இடங்களுக்கு இளைஞர்கள் வருவது, தற்கொலை செய்து கொள்வதற்கு சமம் என்று, ஜம்மு-காஷ்மீர் டி.ஜி.பி. எச்சரித்துள்ளார். பட்கம் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த இளைஞர்கள் சிலர், ராணுவ வீரர்களை நோக்கி கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். அப்போது ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 இளைஞர்கள் உயிரிந்தனர். இது தொடர்பாக பேட்டியளித்த ஜம்மு-காஷ்மீர் டி.ஜி.பி., இளைஞர்களை சிலர் தங்களது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதாக தெரிவித்தார். பிரிவினைவாதிகள், குறுகிய கால அரசியல் லாபத்திற்காக இளைஞர்களை தூண்டிவிட்டு, மாநிலத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டிய அவர், இளைஞர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இருசக்கர வாகனங்களின் மாசு வெளியீட்டை நிர்ணயிக்கும் பிஎஸ்3 (BS-III) தரமுறையில் அமைந்த வாகனங்களை, ஏப்ரல்1ஆம் முதல் விற்பனை செய்யவோ பதிவு செய்யவோ கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடையால், ஏற்கெனவே தயாரித்து வைக்கப்பட்டுள்ள பிஎஸ் 3 மாடலில் அமைந்த 8 லட்சம் வாகனங்களை விற்க முடியாத நிலை நிறுவனங்களுக்கு உருவாகியுள்ளது. இதில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 71 ஆயிரம் ஆகும். எனவே இருக்கிற இருநாள் அவகாசத்தில் இருசக்கர வாகனங்களை விற்றுத் தீர்க்க ஹீரோமோட்டார், ஹோண்டா மோட்டார்சைக்கிள் ஆகிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதற்காக இந்த இரு நிறுவனங்களும் வரலாறு காணாத விலைச்சலுகையை அறிவித்துள்ளன. ஹீரோ மோட்டோகார்ப் ((Hero MotoCorp)) நிறுவனம், பிஎஸ்3 மாடல் இருசக்கர வாகனங்களுக்கு 12 ஆயிரத்து 500 ரூபாய் வரை சலுகை அறிவித்துள்ளது. ஸ்கூட்டர்களுக்கு 12 ஆயிரத்து 500 ரூபாயும், பிரீமியம் பைக்குகளுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாயும், தொடக்க நிலையில் அதிக அளவில் விற்கப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரையும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக டீலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனமானது, பிஎஸ்-3 மாடல் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் அனைத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் சலுகை அறிவித்துள்ளது. ஸ்டாக்குகள் இருக்கும்வரையோ மார்ச் 31ஆம் தேதி வரையோ இந்த சலுகை பொருந்தும் என இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.

கர்நாடகாவில் கடும் வறட்சி காரணமாக அங்குள்ள வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் பாம்பு ஒன்று வந்தது. தாகத்துடன் தவித்த அந்த பாம்பிற்கு அங்குள்ளவர்கள்  பாட்டிலில் உள்ள தண்ணீரை கொடுத்தனர். அதனை ஆர்வமுடன் பாம்பு பருகிய காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: வியாசர்பாடியைச் சேர்ந்த பழனி என்பவர் அளித்த இந்தப் புகாரில், 1995-ம் ஆண்டு, மதுசூதனன் தமிழக அமைச்சராக இருந்தபோது, கே. கே. நகரில் வீட்டுவசதி வாரியம் ஒரு வீடு விஜயலட்சுமி என்ற பெயருக்கு ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டை பத்திரப்பதிவு செய்வதற்காக கொடுக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையில் விஜயலட்சுமி என்ற பெயர் இருந்ததாகவும், ஆனால் வாக்காளர் அடையாள அட்டையில் மதுசூதனன் மனைவி ஜீவாவின் புகைப்படம் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பத்திரப்பதிவின் போது விஜயலட்சுமி என்ற பெண்ணுக்கு பதில் மதுசூதனின் மனைவி ஜீவாவே கைரேகை வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயலட்சுமி என்ற பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்காளர் அட்டையின் எண்ணும், மதுசூதனனின் மனைவி ஜீவாவின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும் ஒன்றாக இருப்பதாகவும் புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், 2010ம் ஆண்டு அந்த வீடு மதுசூதனன் பெயருக்கு மாற்றப்பட்டதாகவும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி மசோதா தொடர்பான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி அந்த மசோதாவின் கீழ், கிட்கேட் சாக்லேட்டா அல்லது பிஸ்கட்டா என்று கேள்வி எழுப்பினார்.

மக்களவையில் நடைப்பெற்ற ஜிஎஸ்டி விவாதத்தின்போது காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி பேசினார். நாடு முழுவதும் ஒரே வரி என்பதை நடைமுறைப் படுத்துவதில் நிறைய சிக்கல்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், பொருட்கள் வகைப்படுத்துதல் செய்வது மிகவும் கடினம் எனவும் அது சரியாகச் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார். தனது கருத்தை விளக்கிய வீரப்ப மொய்லி ‘கிட்கேட் சாக்லேட்டாக கருதப்படுமா அல்லது பிஸ்கடாக கருதப்படுமா?’ என்று கேட்டார். இதே போல தேங்காய் எண்ணெய், சமைப்பதற்கான எண்ணெயாகக் கருதப்படுமா அல்லது தலைக்குத் தடவும் எண்ணெயாகக் கருதப்படுமா? எனவும் கேட்டார்.

தென் மாநிலங்களில் ஏற்கெனவே அறிவித்தபடி வியாழக்கிழமை (மார்ச் 30) காலை 6 மணி முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்குகிறது.
இதனால் தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் 15 லட்சம் லாரிகள் ஓடாது என, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனச் செயலர் தன்ராஜ் தெரிவித்தார்.
காப்பீட்டுப் பிரீமியம் கட்டண உயர்வு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வு போன்றவற்றை கண்டித்து தென் மாநிலங்களில் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்குகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கட்டுப்பாட்டில் உள்ள 90-க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். சரக்கு முன்பதிவு முகவர்களும் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து, புதன்கிழமை முதல் லாரிகளுக்கு சரக்கு முன்பதிவு செய்வதை நிறுத்திவிட்டனர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை புது தில்லியில் மத்திய தரைவழி போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில், காப்பீட்டு பிரீமியம் உடனடியாக உயர்த்தப்பட மாட்டது, லாரி உரிமையாளர்களிடம் கருத்துக் கேட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும். 15 ஆண்டுக்கு மேல் உள்ள வாகனங்களை காலாவதி ஆக்காமல் இயக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
ஆனால், இந்த கோரிக்கைகளை தவிர்த்து மாநில அரசுக்கான கோரிக்கைகள் உள்ளதாகவும், அந்த கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு இதுவரை சம்மேளன நிர்வாகிகளை அழைத்துப் பேசவில்லை. இதனால் போராட்டம் தவிர்க்க முடியாததாகி விட்டது என்று சம்மேளன நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனச் செயலர் தன்ராஜ் கூறியது:
டீசல் மீதான வாட் வரி உயர்வு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு, பழைய வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது போன்றவற்றை மாநில அரசு திரும்பப் பெறும் வரை லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்.

இதுபோல் ஆந்திரம், கேரளம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி தொடங்குகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 4.25 லட்சம் லாரிகள், 5 மாநிலங்களிலும் சுமார் 15 லட்சம் லாரிகள் இயங்காது என்றார்.





கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா நடித்துள்ள படம் - கவண். ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். கவண்' என்பது தூய தமிழ்ச் சொல். மனிதன், ஆயுதங்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டபோது, அவன் தயாரித்த முதல் விசைக்கருவி, 'கவண்' என்று கருதப்படுகிறது. இலக்கைக் குறி பார்த்து, கல் எறியும் கருவியாகப் பயன்பட்ட கவண் பற்றி தமிழ் இலக்கிய நூல்களிலும் குறிப்புகள் உள்ளன.விசை வில்பொறி (catapult),கல்லெறி கருவி (sling) என்று இலக்கியத்திலும், உண்டிக்கோல் என்று வழங்குதமிழிலும் அழைக்கப்படுகிறது கவண்.
நாளை வெளியாகியுள்ள கவண் படத்தின் ஒரு காட்சியின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.


எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் "பேராண்மை.' இப்படத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞனாக நடித்திருந்த "ஜெயம்' ரவியின் கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. உடல் மொழி, கதாபாத்திர பொருத்தம் என எல்லா வகைகளிலும் அக்கதாபாத்திரத்தோடு பொருந்தியிருந்தார். விமர்சன ரீதியாகவும் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் மீண்டும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞனாக நடிக்கிறார் "ஜெயம்' ரவி. விஜய் தயாரித்து இயக்கும் வனமகன் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. "ஜெயம்' ரவி ஜோடியாக சாயிஷா சைகல் நடித்துள்ளார். திரு ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
பழங்குடி இளைஞன் ஒருவனின் காதல், அரசியல், லட்சியம் எல்லாமும்தான் கதை என்கிறார் இயக்குநர் விஜய்.

டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மேலும் 3 ஆயிரம் ‌‌விவசாயிகள் டெல்லி புறப்பட உள்ளதாக‌ திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கூறினர்.

டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 17-ஆவது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு மற்ற மாநில விவசாயிகளும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, திருவண்ணாமலை மற்றும் விழுப்புர மாவட்ட விவசாயிகள் டெல்லி புறப்பட்டு சென்றனர். சென்னையில் இருந்து டெல்லிக்கு ரயில் மூலம் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் புறப்பட்டு சென்றனர். ‌தங்களது உணர்வை வெளிப்படுத்தும் வகையில், மேலாடையின்றி, துண்டை மட்டும் அணிந்து டெல்லி செல்லும் அவர்கள், ஜந்தர்மந்தரில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில் பங்கே‌ற்க உள்ளனர்.

அப்போது பேசிய அவர்கள், கோரிக்கை நிறைவேறாவிட்டால் மேலும் 3 ஆயிரம் ‌‌விவசாயிகள் டெல்லி புறப்பட உள்ளதாக‌வும் தெரிவித்தனர்.

வறட்சி நிவாரண உதவியாக இலங்கைக்கு 100 டன் அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
இது தொடர்பாக நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன், 'இலங்கைக்கு எட்டு தண்ணீர் டேங்கர்களும், 100 டன் அரிசியும் தானமாக அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதா?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மக்களவையில் புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதில் விவரம்: வறட்சி நிவாரண உதவி அளிக்கும்படி இலங்கை அரசிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, அந்நாட்டுக்கு 100 டன் அரிசியும், 8 தண்ணீர் டேங்கர் லாரிகளும் அளிப்பது என்ற முடிவை இந்தியா அறிவித்திருக்கிறது.

இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான வறட்சியை முன்னிட்டு அந்நாட்டு அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இந்தப் பொருள்களை அளிக்க முடிவு செய்யப்பட்டது. 
அதன்படி, கடந்த மார்ச் 21-ஆம் தேதி இலங்கை அரசிடம் தண்ணீர் டேங்கர் லாரிகள் ஒப்படைக்கப்பட்டன. 100 டன் அரிசி கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. வரும் வாரங்களில் இவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெருக்கடி நேரங்களில் அண்டை நாடுகளுக்கு உதவி செய்வதில் இந்தியா எப்போதும் முதலிடத்தில் உள்ளது என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.

வறட்சி, வறுமை காரணமாக வாடும் ஏழை, எளிய விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்யும் விவகாரத்தில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு நேரடியாகக் கருத்து தெரிவிக்காமல், 'மழுப்பல்' பதிலை அளித்தது.
மாநிலங்களவையில் விவசாயிகள் கடன் தள்ளுபடி விவகாரம் தொடர்பாக முக்கிய பிரச்னைகளை அவையின் கவனத்துக்குக் கொண்டு வரும் நேரத்தில் திருச்சி சிவா பேசியதாவது:
வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் இதுவரை 200 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய ஏதுவாக மாநில அரசு கோரியுள்ள ரூ.40 ஆயிரம் கோடியை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்க வேண்டும்.

தில்லி ஜந்தர் மந்தரில் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசியது ஆறுதலாக இருந்தது. ஆனால், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
15.1 லட்சம் விவசாயிகள் 31 லட்சம் ஏக்கர் நிலங்களை ரூ.8,878 கோடி அளவுக்கு காப்பீடு செய்துள்ளனர். அத்தொகையை விவசாயிகளுக்கு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். மாநில அரசுகளால் நிறைவேற்ற முடியாத திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கும் வசதி உள்ளது. அதன்படி மாநில அரசுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்' என்றார் திருச்சி சிவா. அவரது பேச்சுக்கு அதிமுக குழுத் தலைவர் நவநீதகிருஷ்ணன், திமுக உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

இடதுசாரிகள் கேள்வி: இதைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா பேசுகையில், 'பெருநிறுவனங்களின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய ஆர்வம் காட்டும் மத்திய அரசு, ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யத் தயங்குவது ஏன்? தமிழகத்தின் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று உள்ளூர்வாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதை பொருள்படுத்தாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்துடன் மத்திய அரசு ஏன் செய்தது?' என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேசுகையில், 'தமிழகத்தில் நிலவும் வறட்சியால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கால்நடைகளுக்குத் தீவனம் கூட வழங்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். இந்நிலையில், வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய விவசாயிகள் விடுக்கும் நியாயமான கோரிக்கையை ஏற்க வேண்டும்' என்றார்.
அவருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சீதாராம் யெச்சூரி கருத்து தெரிவித்தார்.

அமைச்சர் பதில்: இதையடுத்து, அவையில் இருந்த மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதில் வருமாறு: பயிர்களுக்கான காப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கும் யோசனை மத்திய வேளாண் துறை அமைச்சரின் பரிசீலனையில் உள்ளது. காவிரி மேலாண்மை விவகாரம் மீது மத்திய நீர் வளத் துறை அமைச்சர் உமா பாரதி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
பேரிடர் மேலாண்மை நிதியத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஏற்கெனவே ரூ.1,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. நெடுவாசல் விவகாரத்தில் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மட்டுமே செய்து கொள்ளப்பட்டுள்ளது.
உள்ளூர்வாசிகளிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்துவது அவசியம். நெடுவாசல் அல்லது விவசாயிகள் பிரச்னையில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சு நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என்றார் நிர்மலா சீதாராமன்.
இந்நிலையில், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி குறித்து நிர்மலா சீதாராமன் எவ்வித பதிலையும் அளிக்காதது பற்றி தமிழக உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். இதையடுத்து, அவையை வழிநடத்திய மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் 'இந்த விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் மட்டுமே பதில் அளிக்க முடியும்' என்று கூறினார். இதனால், தமிழக உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்தனர்.

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.