ரூபாய் நோட்டு நடவடிக்கையின் மூலம் நாட்டில் பணத்தின் மதிப்பு உயரும்: பிரதமர் மோடி.

பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் மக்களுக்கு ஆற்றும் உரை மன் கி பாத் நிகழ்ச்சி மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமை ஒலிபரப்பாகிறது. இன்று 26வது நிகழ்ச்சி ஒலிபரப்பானது.

இதில் பேசிய பிரதமர் ரூபாய் நோட்டு பாதிப்பிலிருந்து மீள குறைந்தது 50 நாட்கள் ஆகும் என்றும் மக்களுக்கு உதவ வங்கி ஊழியர்கள் மற்றும் தபால் நிலைய ஊழியர்கள் கடுமையாக உழைக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசும் போது ரொக்கப்பணம் இல்லாத பொருளாதாரத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டிய காலம் வந்து விட்டது. அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டில் பணத்தின் மதிப்பு உயரும் தற்போது பற்றிக் கொண்டிருக்கும் இந்த தீ நாட்டை தங்கம் போல் மின்னச் செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எனது இந்த நம்பிக்கைக்கு முக்கிய காரணம் மக்கள்தான். மக்கள் தற்போது படும் கஷ்டத்தை நான் நன்கு உணர்வேன். இன்னும் 50 நாட்களில் இயல்பு நிலை திரும்பிவிடும். 70 ஆண்டுகளாக புரையூடிப் போன கருப்பு பண விவகாரத்தை அத்துனை இலகுவாக சரிசெய்துவிட முடியாது.

கடுமையான பிரச்னை இருந்தாலும் உங்கள் ஆதரவு என்னை மகிழ்விக்கிறது. நாட்டில் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடி தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படக்கூடிய ஆச்சரியத்தை பிறகு பாருங்கள். உங்களை தவறாக வழிநடத்துபவர்கள் பற்றி நான் கவலைப்படப்போவதில்லை என்று கூறினார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.