மின்சாரத்தை கட் செய்ததற்கு பதிலடி மின்வாரியத்தின் குடிநீர் இணைப்பை துண்டித்தது திருப்பூர் மாநகராட்சி.

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி சார்பில் நீரேற்று நிலையங்கள், தெருவிளக்கு, மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகங்கள், பள்ளிகள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் என்று சுமார் 6 ஆயிரம் மின் இணைப்புகள் பெறப்பட்டுள்ளன. கடந்த மார்ச் முதல் அக்டோபர் வரை திருப்பூர் மாநகராட்சி தலைமை அலுவலகம் மற்றும் 4 மண்டல அலுவலகங்களுக்கான மின் கட்டண பாக்கியாக அபராதத்துடன் சேர்த்து ரூ.7 கோடியை திருப்பூர் மின்வாரிய அலுவலகத்துக்கு செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு மின்வாரியம் சார்பில் எச்சரிக்கை நோட்டீசும் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால், மாநகராட்சி நிர்வாகம் கட்டண பாக்கியை செலுத்தவில்லை. இதனால், மின்வாரிய அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை திருப்பூர் மாநகராட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர், மின் கம்பத்தில் இருந்து மாநகராட்சி அலுவலகத்துக்கு செல்லும் மின் இணைப்புக்கான 'பியூஸ் கேரியரை' எடுத்து சென்றனர். இதையடுத்து, மாநகராட்சி அலுவலகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

இதேபோல், மாநகராட்சியின் 4 மண்டல அலுவலகங்களுக்கும் சென்று அங்கும் மின் இணைப்பை துண்டிப்பு செய்தனர். இதனால், மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக்கொண்டதையடுத்து, மின்கட்டணம் செலுத்த 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் மின்வாரிய ஊழியர்கள் மாநகராட்சி தலைமை அலுவலகம் மற்றும் 4 மண்டல அலுவலகங்களுக்கு மின் இணைப்பை வழங்கினர். இந்தநிலையில், மின்வாரியத்தின் அதிரடி நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், குடிநீர் வரி செலுத்தவில்லை என தெரிவித்து, திருப்பூர் குமார் நகர் துணை மின் நிலையம், திருப்பூர் துணை மின் நிலையம், செயற்பொறியாளர் அலுவலகம், ஊழியர்கள் குடியிருப்பு பகுதி ஆகிய இடங்களில் உள்ள மொத்தம் 4 குடிநீர் இணைப்புகளை துண்டித்துள்ளது. இதனால் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மின்இணைப்பை துண்டித்ததற்கு பதிலடியாக குடிநீர் இணைப்பை துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.