கறுப்பு பணத்தை மாற்ற ஏழைகளை பயன்படுத்த முயற்சி: எச்சரித்த பிரதமர்

புதுடில்லி: இன்னும் சிலர் கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற ஏழை மக்களை பயன்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். இதற்கு யாரும் துணை போக வேண்டாம் என கோரியுள்ளார். இன்றைய மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: * கடந்த மாதம் நாம் தீபாவளி பண்டிகையை கொண்டாடினோம். நான் வழக்கம் போல் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினேன்.* ராணுவ வீரர்களுக்கு மக்கள் வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால், ராணுவ வீரர்கள் எல்லையில்லா மகிழ்ச்சியுடன் உள்ளனர்.* ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து சொல்ல அழைப்பு விடுத்தததை தொடர்ந்து ஏராளமான மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.* பண்டிகையின் மட்டுமல்லாமல், ஒவ்வொரு சந்தோஷ நிகழ்ச்சியிலும், ராணுவ வீரர்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.* எல்லையில் தீபாவளி கொண்டாடிய போது, நான் தனிமையில் இல்லை என ஒரு ராணுவ வீரர் எனக்கு கடிதம் எழுதியுள்ளார்.* மக்கள் ராணுவத்துடன் துணை நின்ற போது, அவர்களின் பலம் 125 கோடி முறை உயர்ந்தது.காஷ்மீரில் அமைதி* கடந்த சில நாட்களுக்கு முன்னர் காஷ்மீர் பிரதிநிதிகள் சிலர் என்னை சந்தித்தனர். அப்போது அனைவரும் அமைதி மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என அவர்களிடம் தெரிவித்தேன்.* மாநிலத்தில் நிலவும் கலவரம் பற்றியும் ஆலோசனை நடத்தினோம்.* காஷ்மீரில் பள்ளி தேர்வில் 95 சதவீத மாணவர்கள் கலந்து கொண்டனர். இதன் மூலம் அவர்கள் அமைதியையும் வளர்ச்சியையும் விரும்புவது தெரியவந்துள்ளது* காஷ்மீர் இளைஞர்கள், கல்வி மூலம் வாழ்க்கையில் உயர் முயற்சி செய்கின்றனர். இதற்காக நான் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்வேண்டுகோள்* ரூபாய் நோட்டு வாபசால் ஏற்பட்ட பிரச்னைகளை புரிந்து கொள்கிறேன். ஆனால், இந்தியாவை கடந்த 70 ஆண்டுகளாக பாதித்த நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது எளிதானது அல்ல.* ரூபாய் நோட்டு வாபஸ் முடிவு என்பது பெரியது.

இதின் பாதிப்பிலிருந்து வெளிவர 50 நாளாகும்.* ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து உலக நாடுகள் ஆராய்ந்து வருகிறன. இந்தியாவுக்கு இதில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்.* உலகம் மற்றும் பொருளாதார அமைப்புகள் நமது சூழ்நிலையை ஆராயந்து வருகிறது நம்மை பின்பற்றுகின்றன.* அரசு, தபால் அலுவலகங்கள், வங்கிகள், என அனைவரும், கடுமையாகவும், அர்ப்பணிப்புடன் பணிபுரிகிறோம்.* நாட்டு நலனுக்காக மக்கள் அரசுக்கு ஆதரவு அளித்தனர். அனைத்து உலக நாடுகளும் நம்மை கவனிக்கின்றன.* சிலர் இன்னும், கறுப்பு பணத்தை வெள்ளையாக்க முயற்சி செய்கின்றனர். இதற்காக அவர்கள் ஏழை மக்களை பயன்படுத்துகின்றனர்.

மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.* கறுப்பு பணத்தை மாற்ற ஏழைகளை பயன்படுத்த வேண்டாம். அவர்களை சிக்கலில் மாட்டிவிட வேண்டாம். பினாமி சொத்துக்களுக்கு கடுமையான சட்டம் உள்ளது.* ரூபாய் நோட்டு வாபஸ் சாதாரணமானது அல்ல. பல சிக்கல்கள் உள்ளது.* பல சிரமத்திற்கு மத்தியிலும் ஆதரவளித்த மக்களுக்கு பிரதமர் நன்றி* உள்ளாட்சி அமைப்புகளுக்க ஏராளமான பணம் வந்துள்ளத.

இதன் மூலம் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடியும்* கடந்த வருடத்தை விட அதிக விதைகள் உரங்கள் வாங்குவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு மாற்று வழி கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்காக விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.* ரூபாய் நோட்டு வாபசால் வரும் காலங்களில் இந்தியாவுக்கு பல பலன்கள் கிடைக்கும். பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும்.* அரசுக்கும், இந்தியாவுக்கும் வெற்றி கிடைக்கும் என நம்புகிறேன்சரியான தருணம்*சிறிய வணிகர்களும் பணமில்லா பொருளாதாரத்திற்கு மாற வேண்டும்.

இதன் மூலம் இந்தியாவிற்கு நல்ல மாற்றம் கிடைக்கும்.* தற்போது ரூபே கார்டின் பயன்பாடு 300 சதவீதம் அதிகரித்துள்ளது.* தொழில்நுட்பம் மூலம் அனைத்து கிராமங்களும் இயங்க முடியும்* பணமில்லா பொருளாதாரத்திற்க பல வழிகள் உள்ளன. இவை பாதுகாப்பானது எளிதானது.* பணமில்லா பொருளாதாரத்திற்கு மாற வேண்டும் என வணிகத்தில் ஈடபட்டுள்ள சகோதரர்கள் மற்றும் சகோதரிகளை கேட்டு கொள்கிறேன்* பணமில்லா பொருளாதாரத்திற்கு மாற மக்கள் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.* வணிகர்கள் மின்னணு பணிவர்த்தனைக்கு மாற இதுவே சரியான தருணம் * சாமான்ய மக்களுக்கு மின்னணு பரிவர்த்தனை பற்றி இளைஞர்கள் கற்றுத்தர வேண்டும் பண பரிமாற்றத்திற்கு மொபைல் ஆப்சுகளை பயன்படுத்துங்கள். * பணமில்லா பரிமாற்றம் தான் நமது இலக்கு. இது முழுவதும் சாத்தியமில்லை என்பதை நான் உணர்வேன்.

எனினும், இதற்கான ஆரம்ப கட்டத்தை நாம் துவக்கி வைப்போம். இதன் மூலம்பணமில்லா பொருளாதாரத்தை நாம் அடையலாம்* ஒருவர் மொபைல் மூலம் சாதாரண நடைமுறைகளுடன் பணப்பரிமாற்றம் செய்யலாம்.* அனைத்து வங்கிகளும், மொபைல் ஆப், இணையளை வசதி, இவாலட்கள் உள்ளன.* இது ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிரான போர்.* கென்யா புதிய மொபைல் -பெசா என்ற வசதியை ஏற்படுத்தியுள்ளது. இன்று அந்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரமும், தொழில்நுட்பத்திற்கு மாறியுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.