ஜிஎஸ்டி அமல்படுத்துவதால் ஏற்படும் மாநிலங்கள் இழப்புக்கு தற்காலிக இழப்பீடு : மத்திய அரசு முடிவு.

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக ஆய்வு செய்வதற்கு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநில பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர். முன்னதாக இந்த கவுன்சில் நடத்திய கூட்டத்தில் தலா 5 சதவீதம்,12,18 மற்றும் 28 சதவீதம் என 4 அடுக்கு வரிவிதிப்பை அமல்படுத்த முடிவு செய்தது.

இந்த நிலையில் ஆடம்பர பொருட்கள் மற்றும் புகையிலை உள்ளிட்ட பொருட்களுக்கு ஏற்படும் இழப்பீடுக்கு ஜிஎஸ்டி நிவாரண நிதி உருவாக்கப்படும். இதையடுத்து முதல் 5 ஆண்டுகளுக்கு மாநில அரசுகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ஜிஎஸ்டி வரி அமல்படுத்துவதால் ஏற்படும் வருமான இழப்பீட்டை சரி செய்ய ஒவ்வொரு காலாண்டுக்கும் தற்காலிக இழப்பீடு வழங்கப்படும். பின்னர் ஆடிட்டர் ஜெனரலின் கணக்கு தணிக்கைக்கு பிறகு எவ்வளவு தொகை தரலாம் என தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.