வாகன தனிக்கையின் போது நிற்காமல் காரில் சென்ற பெண் சுட்டுக் கொலை.

வாகன தணிக்கையின் போது நிற்காமல் காரில் சென்றதாகக் கூறி, காரில் வந்த பெண்ணை பஞ்சாப் போலீஸார் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்டியாலாவை அடுத்த நபா பகுதியில் உள்ள சிறைச்சாலை மீது ஆயுதங்களுடன் வந்த 10க்கும் மேற்பட்டோர் இன்று காலை தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் காலிஸ்தான் விடுதலை முன்னணி தலைவர் ஹர்மீந்தர் மிண்டு உள்ளிட்ட 6 பேர் தப்பினர். இதையடுத்து பஞ்சாப் மாநிலம் முழுவதும் போலீஸார் ரோந்து பணியைத் தீவிரப்படுத்தினர். வாகனப் போக்குவரத்து சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பாட்டியாலா-குல்கா தேசிய நெடுஞ்சாலையில் போலீசாரின் வாகன சோதனையின்போது நிற்காமல் சென்றதாகக் கூறி பெண் ஒருவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் காயமடைந்த அந்த பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://youtu.be/_TUhjaD0fkQ

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.