நடிகர் சங்க கூட்டத்தில் அடி தடி, பரபரப்பு ; ராதாரவி, சரத்குமார் நிரந்தரமாக நீக்கம்.

சென்னை: இன்று கூடிய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி ஆகியோர் நிரந்தரமாக நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக கூட்டம் நடக்கும் அரங்கம் முன்பு இரு தரப்பு ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வாக்குவாதம்: தென்னிந்திய நடிகர் சங்க பொதுக் கூட்டம் இன்று பிற்பகல் தி.நகரில் துவங்கி நடந்து வருகிறது. கூட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே முன்னாள் நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் சிலர் தங்களையும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என கேட்டு தகராறு செய்தனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பொதுக் குழு கூட்டம் நடக்கும் இடத்திற்குள் சென்றனர். பொதுக் குழு கூட்டம் நடந்த இடத்திற்குள் செய்தியாளர்களோ, போலீசாரோ அனுமதிக்கப்படவில்லை. முன்னாள் நிர்வாகிகளின் ஆதரவாளர்களுக்கும், தற்போதைய நிர்வாகிகளின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு அடிதடி சம்பவங்களும் நடந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் நிர்வாகியின் ஆதரவாளர்களை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. இந்த மோதலை அடுத்து பொதுக் குழு கூட்டம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் துவங்கப்பட்டது. கண்ணாடி உடைப்பு: இந்த மோதலில் நடிகர் கர்ணாஸ் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மோதலை அடுத்து பொதுக்குழு நடக்கும் இடத்திற்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நடக்க இருந்த பொதுக்குழு கூட்டம் முன்னாள் நிர்வாகிகள் சிலரின் மிரட்டல் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனாலேயே நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்திலேயே பொதுக்குழுவை நடத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது பொதுக்குழு கூட்டம் நடக்கும் இடத்தின் கதவுகள் முற்றிலுமாக மூடப்பட்டு, கூட்டம் நடந்து வருகிறது. கூட்டம் நடக்கும் இடத்திற்கு வெளியே இருப்போரை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இந்த மோதல் தொடர்பாக முன்னாள் நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் கூட்டத்தில் சரத்குமார், ராதாரவி ஆகிய இருவரையும் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்க முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் காணொலி மூலம் கமலஹாசன் பேசினார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.