சென்னை வக்கீல்கள் 9 பேருக்கு ஓராண்டு தடை : கர்நாடக பார்கவுன்சில் உத்தரவு.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சிஐஎஸ்எப் வீரர்களுடன் நடந்த தகராறு தொடர்பான வழக்கில் 9 வக்கீலுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெண் வக்கீலை சோதனை மையத்தில் சோதனை செய்தபோது அவரை சிஐஎஸ்எப் வீரர் ஒருவர் படம் எடுத்ததாக எழுந்த பிரச்னையில் உயர் நீதிமன்ற வக்கீல்கள் சிஐஎஸ்எப் வீரர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இந்நிலையில், சிஐஎஸ்எப் வீரர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக 9 வக்கீல்கள் மீதும் உயர் நீதிமன்ற போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, அவர்களை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு பார்கவுன்சில் உத்தரவிட்டது. அவர்கள் மீதான விசாரணை கர்நாடக பார்கவுன்சிலுக்கு மாற்றப்பட்டது.

கடந்த ஒரு ஆண்டாக கர்நாடக பார்கவுன்சில் தலைவர் ஜெகதீஷ் தலைமையில் விசாரணை நடந்தது. வக்கீல்கள் 9 பேரும் ஆஜராகி வாதிட்டனர். விசாரணை முடிவடைந்த நிலையில், 9 வக்கீல்களையும் ஒரு ஆண்டு தொழில் செய்ய தடை விதித்து கர்நாடக பார்கவுன்சில் நேற்று உத்தரவிட்டது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.