அவதார் 2: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

2009-ம் ஆண்டு ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கிய அவதார் படம் வெளிவந்தது. உலக அளவில் அதிக வசூல் செய்த படம் இது. அவதார் அள்ளிய $2.79 பில்லியன் வசூலை இதுவரை வேறு எந்தப் படத்தாலும் முறியடிக்கமுடியவில்லை.

அவதார் படம் மேலும் 4 பாகங்களாக வெளியாகும் என அப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் தெரிவித்தார். அவதார் 2, 2018-ம் வருடமும் அதேபோல அடுத்தடுத்தப் பாகங்கள் 2020, 2022, 2023 ஆகிய வருடங்களில் வெளியாக வாய்ப்புள்ளதும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த சில வருடங்களாக நான்கு முன்னணி திரைக்கதையாசிரியர்களுடன் இணைந்து அவதார் படத்தின் கதை தொடர்பாகப் பணியாற்றி வருகிறேன். நான் காணும் கலை என்பது, துல்லியமான கற்பனை உலகம். முதல் பாகத்தை விடவும் சிறப்பாக அமையும். மிகச்சிறந்த காவியமாக உருவாகும் என்று அவர் கூறிய நிலையில், அவதார் 2 படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 21, 2018 அன்று அவதார் 2 வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.