நாபா சிறையில் இருந்து தப்பியவர்களை பிடித்துக் கொடுத்தால், 25 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படும்: பஞ்சாப் அரசு.

பஞ்சாப் மாநிலம், நாபா சிறையை உடைத்து 25 தீவிரவாதிகள் தப்பி ஓடினர்.

பஞ்சாப் சிறையில் இருந்து காலிஸ்தான் பயங்கரவாதிகள் தப்பிச்சென்ற நிலையில் அம்மாநில சிறைத் துறை இயக்குநர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளரும் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை பஞ்சாப் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்தார். சிறையில் நடந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்ய கூடுதல் காவல்துறை இயக்குநர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் தெரிவித்தார். மேலும், உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் தலைமையில் சிறப்பு விசாரணைக்கு குழு அமைக்கப்பட்டிருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் பஞ்சாப்பில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதுற்கு இச்சம்பவமே சிறந்த உதாரணம் என முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சித் தலைவருமான கேப்டன் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.