November 2016

ரோம்: 19-ம் நூற்றாண்டில் வாழந்த ஒருவர் நாம் வாழும் 21ம் நூற்றாண்டிலும் உயிரிரோடு இருக்கிறார் என்றால் நம்மால் நம்ப முடிகிறதா. உலகில் மிகவும் மூத்த பெண் என கருதப்படும் அவர் பிறந்த நாளை கொண்டாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். எம்மா மொனாரோ என்ற பெண் 19-ம் நூற்றாண்டில் இறுதியில் பிறந்து, இன்றுவரை உயிர்வாழும் கடைசிப் பெண் என்ற வரலாற்று சாதனையை படைத்திருக்கிறார். இத்தாலியில் பிறந்த பாட்டி 19, 20, 21 ஆகிய மூன்று நூற்றாண்டுகளில் தன் பிறந்த நாளைக் கொண்டியிருக்கிறார் எனும் செய்தி முதலில் அனைவரையும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. இவர் இத்தாலியில் நவம்பர் 29, 1899-ல் பிறந்துள்ளார்.

உலகிலேயே மிகவும் வயதானவர் என்ற பெருமைக்குறிய சாதனையைப் படைத்துள்ளார். சமீபத்தில் தன் 117-வது பிறந்தநாளை மிக சிறப்பாகக் கொண்டாடினார் எம்மா மொனாரோ. இத்தாலியில் உள்ள லேக் மேகியோர் என்ற இடத்தில் வாழ்ந்துவரும் எம்மா மொனாரோ என்ற பெண்ணுக்கு, எட்டு பிள்ளைகள் உள்ளனர். அவர்களும் இப்போது குடுகுடு தாத்தா, பாட்டியாகிவிட்டபோதிலும், 'இத்தனை வயதுவரை ஆரோக்கியமாக இருக்கும் எங்கள் அம்மாவைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது' என்கிறார்கள் அவரது மகன்கள் மற்றும் மகள்கள். 1936-ல் தன் கணவரை இழந்த பிறகு, ஒரு சிறு தொழிற்சாலையில் கூலிவேலை செய்து தன் பிள்ளைகளைக் காப்பாற்றிவந்தார் எம்மா. தங்களை சிரமப்பட்டு வளர்த்ததை இன்றும் நெகிழ்வோடு உணர்கிறார்கள் பிள்ளைகள். 

மேலும் அவர் கூறியது. ''தினமும் இரண்டு முட்டைகள், அத்தோடு பிஸ்கெட்ஸ் சாப்பிடுகிறேன். பற்கள் இல்லாததனால் என்னால் அதிகமாக சாப்பிட முடியாது என்று FAP நியூஸ் நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். நூறு ஆண்டுகளைக் கடந்த இவருக்கு புதிய விஷயங்கள் ஏதும் தெரியாது என நினைப்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். தனது பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றி கூறும்போது. இன்று என் பிறந்தநாளைக்கு யாரையும் அழைக்கத் தேவையில்லை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சுவிட்ஸர்லாந்து என உலகில் உள்ள எல்லா மக்களும் இணையம் மூலம் என்னை ஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டு இருப்பார்கள்'. 

இப்போது படுக்கையைவிட்டு என்னால் எழுந்துகொள்ள முடியவில்லை. கேட்பதும், பேசுவதும் குறைந்துவிட்டது. கண்பார்வை மங்கிவிட்டது. என் உடல் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழந்து வருவதை என்னால் நன்றாக உணரமுடிகிறது. தனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றி என்று கூறினார். எம்மா மொனாரோவை கௌரவிக்க உள்ளூர் திரை அரங்குகளில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இவரைப் பற்றிய சுய சுயசரிதை 'The Woman Who Saw Three Centuries' என்ற பெயரில் விரைவில் புத்தகமாக வெளிவர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நட்ராஜ் நடிப்பில் ரிலீசான 'சதுரங்க வேட்டை' படத்தின் தொடர்ச்சியாக 'சதுரங்க வேட்டை 2' படம் உருவாக்கப்படுகிறது. மனோ பாலாவின் பிக்சர் ஹவுஸ் தயாரிக்கிறது. அரவிந்த்சாமி, த்ரிஷா, நாசர், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். 'சலீம்' என்.வி.நிர்மல் குமார் இயக்கு கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங், சென்னை தரமணி பகுதியில் அமைக்கப்பட்ட சிறைச்சாலை அரங்கில் நடந்து வருகிறது. 

அரவிந்த்சாமியும், த்ரிஷாவும் நண்பர்களாக நடிக்கின்றனர். இப்போது அரவிந்த்சாமி ஜோடியாக பூர்ணா நடிக்கிறார். 'தமிழில் 'சவரக்கத்தி', 'மணல் கயிறு 2', 'அம்மாயி' ஆகிய படங்களைத் தொடர்ந்து, 'சது ரங்க வேட்டை 2' படத்தில் நான் அரவிந்த்சாமி மனைவியாக நடிக்கிறேன். படப்பிடிப்பு நடந்து வருகிறது' என்றார் பூர்ணா.

அழகிய மஞ்சள் வண்ணத்தில் கொத்துக் கொத்தான மலர்களைத் தாங்கி எங்கும் வளரும் ஒரு செடி ஆவாரை ஆகும். சாலை ஓரங்களிலும் சிறுகுன்றுகளிலும் நம் கண்ணுக்கு அதிகம் விருந்தாகிற செடியான ஆவாரை, மூன்று அடிகள் வரை வளரும் ஒரு குத்துச் செடியாகும். ஆவாரையின் தாவரவியல் பெயர் Cassia Aariculata என்பதாகும். இதை ஆங்கிலத்தில் Tanners Cassia என்றும், வடமொழியில் 'தெலபோதகம்' என்றும், தெலுங்கில் 'தங்கேடு' என்றும் குறிப்பது வழக்கம். 

இதன் இலை, பூக்கள், பட்டை, விதை, வேர் மற்றும் பிசின் ஆகிய அனைத்துமே மருந்தாகி பயன் தருகின்றன. இதன் அனைத்துப் பகுதிகளும் மிக்க துவர்ப்புடையதாக விளங்குகிறது. ஆவாரையின் அனைத்து பகுதிகளும் மனிதருக்கு மருந்தாவது மட்டுமின்றி பயிர்களுக்கும் சிறந்த உரமாக விளங்கு கிறது. ஆவாரையின் அனைத்துப் பகுதி களுமே காய்ச்சலைப் போக்கும் குணம் உடையது, கல்லீரல் மற்றும் மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியமாக செயல்பட வைக்கும் தன்மையுடையது. 

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுவது. உடலின் பல பகுதிகளிலும் தன்னிச்சையாகச் செயல்பட்டு பல கேடுகளை உண்டாக்கிப் பின் புற்றுநோய்க்குக் காரணமாக விளங்கும் நச்சுக்களை(Free Radicals) விரைந்து வெளியேற்றும் குணம் கொண்டது. மனிதருக்கு நோய் செய்யும் நுண்கிருமிகள் எதுவாயினும் அழித்து அகற்றும் வல்லமை உடையது.

ஆவாரம்பட்டையை நீரில் இட்டுக் காய்ச்சிக் காலை தோறும் வாய் கொப்பளிக்கப் பயன்படுத்துவதால் வாய்ப்புண்கள் எவ்விதமானதாயினும் விரைவில் ஆறிவிடும். ஈறுகள் பலம் பெறும், பற்கள் கெட்டிப்படும். இது வற்றச்செய்யும் மருத்துவ குணம் உடையது. மேலும், உடலுக்கு டானிக்காக உரம் தரக்கூடியது. ஆவாரையின் விதைகள் குளிர்ச்சியுண்டாக்கும் தன்மை உடையது, குருதியை நீர்மைப்படுத்தக்கூடியது உடல் தேற்றியாக விளங்கக் கூடியது.

ஆவாரை நெஞ்செரிச்சல், அமில மேல்வரத்து(Reflex), ஆஸ்துமா, உடலில் ஏற்படும் துர்நாற்றம், மலச்சிக்கல், ரத்த மற்றும் சீதபேதி, நீர்க்கசிந்து அரிப்பைத் தரக்கூடிய 'எக்ஸீமா'எனும் தோல் நோய், கண்களின் எரிச்சல், புகைச்சல் மற்றும் புளிப்பு உண்டாகுதல், உயர் ரத்த அழுத்தம், வெள்ளைப் போக்கு (ஆண், பெண் இருபாலருக்கும்), மூட்டுக்களில் ஏற்படும் வலி, சிறுநீருடன் விந்து கலந்து வெளியேறுதல், வயிற்று வலி, உடலில் ஏற்படும் பலவித வீக்கங்கள், சிறுநீர்த் தாரையில் ஏற்படும் தொற்றுக்கள் போன்ற மிக நீண்ட பட்டியலான நோய்களைத் தீர்த்து வைக்கும் திறன் படைத்தது. 

இவற்றை மனதில் கொண்டுதான் ஆவாரையின் 'ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ' எனும் பழமொழி தமிழில் நிலைபெற்றது எனலாம்.

ஆவாரை பற்றிய அகத்தியர் குணபாடம் ஒன்று : 

'தங்கம் எனவே சடத்திற்குக் காந்தி தரும்
மங்காத நீரை வறட்சிகளை அங்கத்தாம்
மாலைக்கற் றாழை மணத்தை அகற்றிவிடும்
பூவைச்சேர் ஆவாரம் பூ' 

ஆவாரம் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும், சருமம் பொன்னிறமாகி அழகு கூடும், எந்த வீக்கமும் விரைவில் கரைந்து போகும், உடலின் வறண்ட தன்மை மாறும், நாவறட்சி நீங்கும், உடலில் உப்பு போன்ற வெண்மை படிதல் தடுக்கப்பட்டு துர்நாற்றம் தரக்கூடிய கற்றாழை வாடை அகலும் என்று குறிப்பிடுகிறார் அகத்தியர். மேலும், இன்னொரு பாடலில் பல வகைப்பட்ட சிறுநீர் கோளாறுகளை அகற்றும் திறன் கொண்டது ஆவாரை என்று குறிப்பிடுகிறார் அகத்தியர். 

சிறுநீரோடு சர்க்கரை கலந்து வெளியேறுதலும், ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்படும் சிறுநீர்த்தாரை எரிச்சலும், சிறுநீர் தொற்றும் ஆவாரையால் ஒழிந்து போகும் என்று பாடியிருக்கிறார். 

ஆவாரையின் மருத்துவப் பயன்கள் : 

* ஆவாரைப் பட்டையை உலர்த்தித் தூளாக்கி வைத்துக்கொண்டு, தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி தூளை நீரில் இட்டுக் கொதிக்க வைத்து ஆற வைத்த பின் வாய்க் கொப்பளிக்க ஈறு நோய்கள் விலகும்; பற்கள் பலம் பெறும். இதையே உள்ளுக்குக் குடிப்பதால் சிறுநீர்த்தாரை எரிச்சல் அடங்கும். ரத்தம் கெட்டிப்படுவது தவிர்க்கப்பட்டு இதய அடைப்புகள் வராமல் தடுக்கப்படும்.

* ஆவாரை விதையைக் காய வைத்து பொடித்து வைத்துக்கொண்டு, சிறிது நீர்விட்டுக் குழைத்து கண் இமைகளைச் சுற்றிப் பற்றாகப் போட்டு வைக்க கண்களின் சிவந்த நிறம் நீங்கும். அத்துடன் கண் எரிச்சல், நீர் வடிதல் ஆகிய பிரச்னைகளும் குணமாகும்.

* ஆவாரை இலை குளிர்ந்த தன்மையுடையது என்பதால் கோடை வெயிலில் பயணம் செய்பவர்கள் ஆவாரம் இலைக் கொத்துக்களை தலை மீது பரப்பி நிழல் தரும்படி வைத்துச் செல்வர். இதனால் வெப்ப சலனத்தால் வரும் மயக்கம், வலிப்பு போன்றவை தவிர்க்கப்பெறும்.

* ஆவாரம்பூவைக் கூட்டாகவோ, கறியாகவோ சமைத்து சாப்பிட உடலின் கற்றாழை வாடை விலகிப் போகும்.

* ஆவாரைப் பஞ்சாங்கம் எனப்படும் வேர், இலை, பட்டை, பூ, காய் ஆகியன சேர்ந்த கலவையை சம அளவு எடுத்து, அதன் கலவையை 10 கிராம் அளவு காலையும் மாலையும் இருவேளை வெந்நீர் சேர்த்து உண்டு வந்தால் சரும நோய்கள், நாவறட்சி, அடங்காப்பசி, உடல் மெலிவு, உடல் எரிச்சல், உடல் சோர்வு, மயக்கம், மூச்சு முட்டுதல் ஆகியன விரைந்து குணமாகும்.

* ஆவாரைச் செடியின் பிசின் சேகரித்து தினமும் இருவேளை குளிர் நீேராேடா அல்லது மோரோடோ பத்து கிராம் வரை குடித்து வர இருபாலருக்கும் ஏற்படும் வெள்ளைப்போக்கு குணமாகும். சிறுநீர்த் தாரையில் ஏற்படும் எரிச்சலும் விலகிப் போகும்.

* ஆவாரை பஞ்சாங்கம் வாங்கி குடிநீர் ஆகக் காய்ச்சி குடிநீரின் அளவுக்கு சரியளவு பனங்கற்கண்டு சேர்த்து வால்மிளகு, ஏலக்காய் இவற்றை போதிய அளவு உடன் சேர்த்து மணப்பாகாகக் காய்ச்சி வைத்துக் கொண்டு தினம் இருவேளை பால் அல்லது நீர் சேர்த்து பத்து மில்லி வரை சாப்பிட்டுவர இளைத்த உடல் பலம் பெறும். அதிக சிறுநீர் போவது மட்டுப்படும்.

* ஆவாரம் இலையை இடித்து தலை முதல் கால் வரையில் உடம்பில் ஊறும்படி ஓரிரு மணி நேரம் பூசி வைக்க வாதம் என்னும் வாயுத் துன்பம், உடலில் ஏற்பட்ட ரணம் ஆகிய அனைத்தும் போகும்.

* ஆவாரம் பூ, உலர்ந்த எலுமிச்சைத் தோல், பச்சைப்பயறு, ரோஜா இதழ்கள், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்து மெல்லிய பொடியாகத் தயாரித்து வைத்துக்கொண்டு, பன்னீர் சேர்த்து குழைத்து முகப்பூச்சாக பூசி வைத்திருந்து அரை மணி நேரம் கழித்துக் கழுவினால் முகத்தின் கருந்திட்டுக்கள், கரும்புள்ளிகள், முகத்தின் சரும சுருக்கம் ஆகியன விலகும். இதை உடலுக்குப் பூசிக் குளிப்பதற்கும் பயன்படுத்தலாம்.

* ஆவாரம் பூவை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு தினம் காலை வெறும் வயிற்றில் 10 கிராம் அளவு சாப்பிட்டு வர ரத்தசோகை குணமாகும். புதிய ரத்தம் உற்பத்தி ஆகும்.

* ஆவாரம் இலையைக் காய வைத்து அன்றாடம் மாலை வேளையில் வீட்டில் புகை மூட்ட இரவுக் கால பூச்சிகள், கொசுக்கள் வீட்டை விட்டு விலகிப் போகும்.

* ஆவாரம் பூவை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு சம அளவு பாசிப்பயறு மாவு மற்றும் சீயக்காய் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்து வருவதால் தலைப்பொடுகு, அரிப்பு, முடி உதிர்தல் ஆகியன குணமாகும். கூந்தல் செழுமையாகவும், கருமையாகவும் வளரும்.

* ஆவாரையின் வேரைக் காயவைத்துப் பொடித்து வைத்துக்கொண்டு தினம் 10 கிராம் அளவுக்கு தீநீர் இட்டுக் குடிக்க காய்ச்சல் எவ்வகையாக இருந்தாலும் அடங்கிப் போகும். அது மட்டுமின்றி சர்க்கரை நோயும் கட்டுக்கடங்கும்.

* ஆவாரம் பூவின் சூரணத்தை அந்தி சந்தி என இரண்டு வேளை பெண்கள் வேளைக்குப் 10 கிராம் வீதம் சாப்பிட்டு வர PCOD எனும் கர்ப்பப்பைக் கட்டிகள் கரையும்.

* ஆவாரையைத் தேநீராக்கிக் குடித்து வருவதால் இரண்டாம் நிலைச் சர்க்கரை(Type 2) தவிர்க்கப்படும். ஆண்மை பெருகும். விந்தணுக்களின் எண்ணிக்கையும், அதன் பயணத்தன்மையும்(Motility) அதிகரிக்கும். மது குடித்ததால் ஏற்பட்ட ஈரல் நோய்கள் குணமாகும். மலச்சிக்கல் மட்டுப்படும். சிறுநீர்த்தாரைத் தொற்றுகள் சீராகும். ஆவாரை சாலை ஓரங்களில் எளிதாகக் கிடைக்கக்கூடிய ஒன்று. அதன் மிகப் பெரிய மருத்துவ குணம் தெரிந்து இனியேனும் பயன்படுத்திக் கொள்வோம்.

விசாகப்பட்டினத்திலுள்ள கப்பல் கட்டும் நிறுவனத்தில் ஒரு வருட மற்றும் 2 வருட அப்ரண்டிஸ் பயிற்சி தொடங்க உள்ளது. ஐடிஐ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: Apprenticeship.

மொத்த காலியிடங்கள்: 290.

a. One year Training (2017 - 18 Batch).

1. Electrician - 35 இடங்கள், Electroplater - 3, Electronics Mechanic - 25, Information Technology & Electronic System Maintenance - 8, Fitter - 35, Instrument Mechanic - 8, Machinist - 25, Mechanic Machine Tool Maintenance - 6, Painter (General) - 8, Pattern maker - 3, Refrigeration and AC Mechanic - 18, Welder (Gas & Electric) - 18.

b. Two year Training (2017 - 19 Batch).

1. Carpenter - 25 இடங்கள், Foundryman - 3, Forger & Heat Treate r- 3, Mechanic (Diesel) - 25, Pipe Fitter/ Plumber - 16, Sheet Metal Worker - 26.

வயதுவரம்பு:

பொதுப்பிரிவினர்கள் 1.4.1996 முதல் 1.4.2003க்குள் பிறந்திருக்க வேண்டும். எஸ்சி.,எஸ்டியினர் 1.4.1991 முதல் 1.4.2003க்குள் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் 65% மதிப்பெண்களுடன் ஐடிஐ முடிந்திருக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்விற்கு Mathematics, General Science and General Knowledge பாடப்பிரிவுகளிலிருந்து கேட்கப்படும். 

விண்ணப்பதாரர்கள் www.indiannavy.nic.in/content/civilian என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

பின்னர் உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபாலில் பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டும்.

பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:

The Officer-in-Charge,

Naval Dockyard Apprentices School,

VM Naval Base S.O., P.O.,

Visakhapatnam- 530 014.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:5.12.2016.

பிரின்ட் அவுட் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 12.12.2016.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 1.2.2017.

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல தாதாவின் மனைவி குமாரியை சென்னை விமான நிலையத்தில் அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

நில அபகரிப்பு மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக உள்ள பிரபல ரவுடி காஞ்சிபுரம் ஶ்ரீதரின் மனைவி சென்னையில் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல தாதா ஶ்ரீதர் மற்றும் அவரது மனைவி குமாரி ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில் வெளிநாட்டில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த ஶ்ரீதரின் மனைவி குமாரியை, அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.

மேலும், ஶ்ரீதரின் 80 சதவீதம் சொத்துக்கள் பெரும்பாலும், அவரது மனைவி குமாரியின் பெயரிலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே ஶ்ரீதர் துபாயில் தலைமறைவாக இருப்பதாகவும், அவரைக் கைது செய்ய அமலாக்கத்துறை, இண்டர்போல் போலீசாரின் உதவியை நாட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

2006, 2011ல் தேர்வான சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை, ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த பொன் தங்கவேலு என்பவர், கடந்த ஆண்டு சென்னையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு நஷ்டஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், சென்னை மழை வெள்ளத்தால், தமது உடமைகள் அனைத்தையும் இழந்துவிட்டதாகக் குறிப்பிட்டு, அதற்கு மாநகராட்சி அதிகாரிகளிடம் நிவாரணம் கேட்டுள்ளார். அதற்கு மாநகராட்சி தரப்பில் போதிய வருவாய் இல்லை என பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அதிர்ச்சியடைந்த அவர், மாநகராட்சியின் கவுன்சிலர்கள் சிலர், தங்களது சொத்துக்களுக்கு குறைவான சொத்து வரியை நிர்ணயம் செய்ய அதிகாரிகளை நிர்ப்பந்திப்பதாகவும், அதனாலேயே மாநகராட்சியில் போதிய வருவாய் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த அடிப்படையில் சொத்து வரி நிர்ணயிக்கப்படுகிறது என்றும், பெரிய வீடுகளுக்கு சொத்து வரி ரூ.250 விதிக்கப்பட்டது எப்படி என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், அரண்மனை போன்ற வீடுகளுக்கு குறைந்த அளவு வரி விதிக்கப்பட்டது எப்படி என்றும், கவுன்சிலர் பதவிக்குதான் அதிக போட்டி இருக்கும். கவுன்சிலரே இவ்வளவு சொத்து சேர்த்ததை அறிந்தால் எம்எல்ஏ சீட் கேட்க மாட்டார்கள் என்று கூறியதோடு, 
2006, 2011ல் தேர்வான சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் சொத்து விவரங்களை அளிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார் நீதிபதி, மேலும் வழக்கு விசாரணையை டிசம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 34 பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த இரு வாரங்களுக்கு முன்பு யுபிஎஸ்சி அறிவித்திருந்தது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை கடைசி தினமாகும்.

பணி: Deputy Director in Directorate General of Civil Aviation : (Aircraft Engineering) - 01

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100.
வயதுவரம்பு: 53க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் Aeronautical,Electrical, Electronics,Mechanical, Metallurgical பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Joint Director in National Museum - 01

சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000. 
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: MuseologyHistory of Art, History, Sanskrit, Pali, Prakrit, Persian, Arabic, Archaeology, Anthropology, Fine Arts, Chemistry போன்ற பாடங்களில் முதுகiலை பட்டம் பெற்று 12 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Professor (Survey and Engineering) in Indira Gandhi National Forest Academy - 01

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: மத்திய தொழிலாளர் துறையில் தொழிலாளர் உதவி ஆணையர் Junior Time Scale (JTS) - 33

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று Social Work, Labour Welfare, Industrial Relations, Personnel Management, Labour Law பாடத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத் தேர்வின் போது விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

http://www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி:

01.12.2016.

விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்துள்ள கொள்ள கடைசி தேதி:

02.12.2016.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய

http://www.upsconline.nic.in

என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விழுப்புரம்விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் 5 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

முண்டியம்பாக்கத்தில் கூட்ரோடு பகுதியில் எதிரெதிரே வந்து கொண்டிருந்த இரண்டு அரசுப் பேருந்துகளும் நேருக்கு நேர் மோதியதில், பேருந்தில் இருந்த 5 பயணிகள் பலியாகினர்.

இந்த விபத்தில் காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினரும், மீட்புக் குழுவினரும், விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

தமிழ்ப் படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பது ஏமாற்றுவேலை. இதனால் தமிழ்மொழி வளர்ச்சிக்கு என்ன பயன்? என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு, திமுக ஆட்சியில் திரைத் துறையின் வளர்ச்சிக்காக தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்கள், தமிழ் கலாச்சாரம், மொழி மேம்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட படங்கள், வன்முறை, ஆபாச காட்சிகள் இல்லாத திரைப்படங்கள் ஆகியவற்றுக்கு வரிவிலக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் வந்த அதிமுக அரசும் அதே நடைமுறையை சில கூடுதல் விதிமுறைகளுடன் பின்பற்றியதுடன், படங்களுக்கான வரிவிலக்கைப் பரிந்துரைக்க குழுவையும் அமைத்தது.

இந்நிலையில், சவாரி என்கிற படம் யு சான்றிதழ் பெற்றபின்பும் வரிவிலக்கு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது தமிழ்த் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது தொடர்பாக நீதிபதி கிருபாகாரன் எழுப்பிய கேள்விகள்:

தமிழ்ப் படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பது ஏமாற்றுவேலை. இதனால் தமிழ்மொழி வளர்ச்சிக்கு என்ன பயன்? தமிழ்ப் படங்களுக்கு வரிவிலக்கு அளித்ததன் மூலம் தமிழ்மொழி வளர்ச்சிக்கு என்ன செய்தீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

2006 முதல் தற்போது வரை 2012 படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டதாக தமிழக அரசு தகவல் அளித்தது. இதன் பண மதிப்பு குறித்து அறிக்கை தர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.