October 2016

சட்டம்:
'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்!
அரசாங்கம், மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராகவோ அல்லது அரசு தலையிட்டு நடத்த வேண்டிய காரியங்களுக்கு ரிட் மனு தாக்கல் செய்யலாம்.
எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்?
பொது நலன் பாதிக்கப்படும்போது, பொது நல வழக்குகள் (Public Interest Litigation) தொடரலாம்.

1. உதாரணமாக உங்கள் ஏரியா ரோடு மோசமாக இருந்தால், அந்தப் பகுதியின் அதிகாரத்திற்குட்பட்ட அரசுத்துறைகளுக்கு ஒரு மனு கொடுத்தும், அவர்கள் எதுவும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், அந்தத் துறைக்கு ரோடு போட உத்தரவு போடச் சொல்லி அரசாங்கத்தைக் கேட்கலாம்.
நீங்கள் குடியிருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் ஒரு ஃபேக்டரியிலிருந்து புகை வந்து, அந்தப் புகை சுற்றுச் சூழலை பாதித்தால், அருகில் இருக்கும் மாசுக்கட்டுப்பாடு அலுவலகத்தில் புகார் செய்யலாம்.
அறுபது நாட்களுக்குள் அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்கச் சொல்லி, ரிட் மனு தாக்கல் செய்யலாம். தற்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் சாயப்பட்டறைகளை மூட வேண்டும் என்று ஹைகோர்ட் தீர்ப்பளித்தது கூட அந்தப் பகுதி மக்கள் ‘ரிட்’ மனு தாக்கல் செய்த பின்பு தான்.

ஐந்து வகைகளில் ரிட் மனுவைத் தாக்கல் செய்யலாம்.

1. முதல் வகை, ‘ரிட் ஆஃப் மாண்டமஸ்’. இதற்கு ஆணையிடும் நீதிப் பேராணை என்று பொருள். அதாவது, தனக்கு வரையறுக்கப்பட்ட கடமையை ஒரு அரசு அதிகாரி செய்யாவிட்டாலோ, அரசாங்கம் அல்லது அரசு சார்ந்த நிறுவனம் சட்ட விரோதமான உத்தரவைப் பிறப்பிக்கப் போகிறது என்று தெரிந்தாலோ, அந்தக் காரியத்தை செய்யாமல் தடுக்க, ஆணையிட வேண்டும் என்று ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்.
சாலையின் பிளாட்பார ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தர விடக்கோரி ரிட் மனுவைத் தாக்கல் செய்யலாம்.

2.அடுத்தது ‘செர்ஷியோரரி (certiorari) ரிட்.’ ஒரு ஹை கோர்ட்டின் அதிகாரத்தில் உள்ள, ஒரு கோர்ட் அல்லது, தீர்ப்பு கொடுக்கும் அதிகாரமுள்ள ஒரு அரசு அதிகாரி, சட்ட விரோதமாக, ஒரு உத்தரவு போட்டால், அந்த உத்தரவை ரத்து செய்யவும், அல்லது அந்த குறிப்பிட்ட நீதி மன்றத்துக்கோ அல்லது அரசு அதிகாரிக்கோ, சரியான வழிமுறையை உணர்த்தும்படி உத்தரவிடக்கோரி கேட்பதுதான் இந்த ரிட் மனுவின் அடிப்படை. என்ன புரியவில்லையா? உதாரணமாக, ஒரு சினிமா தியேட்டர் கட்டுவதற்கு கலெக்டரிடம் ‘நோ அப்ஜக்ஷன்’ ஒருவர் கேட்கிறார். அங்கே இருபத்தைந்து அடி தூரத்தில் ஹாஸ்பிடல் இருக்கிறது. சினிமா தியேட்டரால் ஹாஸ் பிடலுக்கு பாதிப்பு வரும், அதனால், நோ அப்ஜக்ஷன் கொடுக்கக் கூடாது என்று பொதுமக்கள் ஆட்சேபித்தும் அந்த ஆட்சேபணையைப் பரிசீலிக்காமல், நோ அப்ஜக்ஷனை கலெக்டர் தந்தால், அந்த உத்தரவை எதிர்த்து ‘செர்ஷியோரரி ரிட்’ மனு தாக்கல் செய்யலாம்.

3.மூன்றாவது ரிட் மனுவிற்கு ‘கோவாரண்டோ’ (Quowarranto) என்று பெயர். எந்த ஒரு அரசாங்க அதிகாரியாவது, தகுதி இல்லா மல், ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டாலோ அல்லது தனது பதவி யின் அதிகார வரம்பை மீறி அவர் உத்தரவு பிறப்பித் தாலோ, அதை எதிர்த்து ‘கோவாரண்டோ ரிட்’ தாக்கல் செய்யலாம்.

4.அடுத்தது பிரொகிபிஷன் (Prohibition) ரிட். அதாவது ஒரு நீதி மன்றம் தனது அதிகார வரம்பு மீறி செயல்படாதவாறு தடுப்பத ற்காகப் போடப்படுவது இது.

5.அடுத்தது ‘ஹெபியஸ் கார்பஸ்’ (Hebeas corpus) ரிட். இதற்குத் தமிழில் ‘ஆள் கொணர் ஆணை’ என்று பொருள். நமக்குத் தெரிந்த ஒருவர் தவறாகக் காவலில் வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது ஒருவரைக் காணவில்லை, அவரை யாரோ கடத்தி, அடைத்து வைத்து இருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டாலோ, இந்த ரிட் மனுவை நாம் தாக்கல் செய்யலாம். இந்த மனுவை விசாரிக்கும் நீதிமன்றம், காவல்துறைக்கு அந்த நபரை, நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்தச் சொல்லி உத்தரவிடும்.
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், ‘ஹெபியஸ் கார்பஸ்’ மற்றும் ‘கோவாரண்டோ ரிட்’ மனுக்களை யார் வேண்டு மானாலும் போடலாம்.
ஆனால், மற்ற ரிட் மனுக்களான ‘மாண்ட மாஸ்’  ‘செர்ஷியோரரி’ மற்றும் ‘ப்ரோகிபிஷன் ரிட்’ மனுக்களை பாதிக்கப்பட்ட நபர்கள்தான் தாக்கல் செய்யலாம்.

சமீபத்திய நிலநடுக்கத்தை தொடர்ந்து இத்தாலியின் மத்தியில் பாதிப்புக்குள்ளானபகுதிகளை மீண்டும் கட்டியமைப்பதற்கு தேவையான அவசர நிதி திரட்டுவது பற்றி விவாதிக்க இத்தாலி பிரதமர் மட்டயோ ரொன்சி இன்று அமைச்சரவை கூட்டத்தை நடத்தவிருக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட கட்டடங்களின் பாதுகாப்பை மதிப்பிடுவதற்காக கட்டமைப்பு பொறியியலாளர்கள் அவற்றில் சோதனை நடத்தி வருகின்றனர்.
நிலநடுக்கத்திற்கு பிந்தைய அதிர்வுகள் ஏற்படும் ஆபத்து நிலவுவதால், அந்த பகுதியில் வசிக்கும் மக்களை தொலைவில், எய்டிரியாடிக் கடற்கரையில் இருக்கின்ற தற்காலிக முகாம்களுக்கு செல்ல அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த புனித பென்னடிக்ட் பேராலயமும் ஒன்று.
வீடுகளுக்கு செல்ல மிகவும் பீதியடைந்து, ஆயிரக்கணக்கான மக்கள் கார்களிலும், முகாம்களிலும் இரவை கழித்துள்ளனர்.
1980 ஆம் ஆண்டுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நோர்ட்ச்சா நகரமும் ஒன்று.
இதனால், இடைக்காலத்தை சேர்ந்த புனித பென்னடிக்ட் பேராலயம் தரைமட்டமாகியுள்ளது.

கள்ளக் காதல், அதை வைத்து மிரட்டல் என்ற கிளுகிளு கதைக் களத்தில் எடுக்கப்பட்ட திருட்டுப் பயலே படத்தை அத்தனை சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள் ரசிகர்கள்.
அந்தப் படத்தை இந்தியில் எடுப்பதாகக் கூறி பாலிவுட் போன இயக்குநர் சுசி கணேசன், சில மோசமான தோல்விப் படங்களைக் கொடுத்ததுதான் மிச்சம். மீண்டும் தமிழுக்கே திரும்பிவிட்டார்.
தனது 'கம் பேக்' படத்துக்காக அவர் தேர்வு செய்திருப்பது அதே திருட்டுப் பயலே கதைக் களம்தான்.
இந்த படத்தில் ஜீவன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹாவும், அப்பாஸ் கதாபாத்திரத்தில் பிரசன்னாவும் நடிக்கவிருப்பதாகவும் சுசி கணேசன் தெரிவித்துள்ளார்.
முதல்பாகத்தில் மாளவிகா ஏற்றிருந்த பாத்திரம் கதாநாயகியை விட முக்கியமானது.
அந்த ரோலுக்கு அமலா பாலை தேர்வு செய்திருக்கிறார் சுசி கணேசன்.
முதல் பாகத்தைத் தயாரித்த அதே ஏ.ஜி.எஸ். நிறுவனம்தான் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறது.

2014-ல் சென்னை அருகேயுள்ள மவுலிவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 61 பேர் பலியானார்கள். முதல்வர் ஜெயலலிதா சம்பவ இடத்தை நேரடியாக பார்வையிட்டு விசாரணைக்கும் உத்தரவிட்டிருந்தார்.
அதனருகே கட்டப்பட்டிருந்த மற்றொரு கட்டடத்தை இடித்து தள்ள வழக்கு தொடரப்பட்டது. தற்போது, நீதிமன்ற உத்தரவுப்படி சர்ச்சைக்குரிய அந்த 2-வது கட்டடம் வரும் 2-ம் தேதி இடிக்கப்படும் என சி.எம்.டி.ஏ தெரிவித்துள்ளது.

1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல்.
2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.
3. சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்பு சான்றுஆகிவையவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல்.
4. பொது மக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கடன்கள்பெறுவதற்கு சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்களை வழங்குதல்.
5. பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை பராமரித்தல்.
6. தீ விபத்து, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் பொழுது உயர்அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புதல், இயற்கை பேரிடர்களின் பொழுது ஏற்பட்ட இழப்புகளை வருவாய் ஆய்வாளர் மதிப்பிடு செய்யும் பொழுது உதவி செய்தல்.
7. கொலை, தற்கொலை மற்றும் அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தல் மற்றும் விசாரணைக்கு உதவி புரிதல்.
8. காலரா, பிளேக் உள்ளிட்ட நோய்களும் மற்றும் கால்நடை தோற்று நோய்கள் பற்றிய அறிக்கை அனுப்புதல்.
9. இருப்பு பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல்.
10. கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியல் தயாரித்தல்.
11. கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்.
12. கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களைப் பாதுக்காத்தல்.
13. புதையல்கள் பற்றி மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தல்.
14. முதியோர் ஓய்வு ஊதியம் வழங்குவது குறித்த பணிகளை கவனித்தல்.
15. பொது சொத்துக்கள் பற்றிய பதிவேட்டை பராமரித்தல்.
16. முதியோர் ஓய்வு ஊதிய பதிவேட்டை பராமரித்தல்.
17. வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற, சேவை நிறுவனங்களுக்குதேவையான விவரங்கள் அளித்தல் மற்றும் ஒத்துழைப்பு செய்தல்.
18. உழவர்கள் நிலப் பட்டாக்காளை மாறுதல் செய்து பெறவும், புலங்களை உட்பிரிவு செய்துக் கொள்ளவும், தனிப் பட்டாக்காளை பெறவும், இயலும் வகையில் நிலப்பதிவேடு, நில அளவை ஆவணங்கள் தொடர்பாக கணக்குகளை முறையாகவும் சரியாகவும் வைத்து வருதல்.
19. பாசன வாயில்களை முறையாக பராமரித்தல், ஏரிகளிலும், நீர் வழங்கு பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் நீர்பாசனத்திற்கு வகை செய்தல்.
20. சட்டம் ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்ற நிகழ்ச்சிகள் நடந்தவுடனே அவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புதல்.
21. நிலச்சீர்திருத்த சட்டங்கள் தொடர்பான முறையான நடவடிக்கை எடுத்தல்.
22. முறையாக துப்புரவு பணிகளை பேணி வருதல்.
23. அரசாங்கம் அவ்வபொழுது தொடங்கும் ஏனைய நலத்திட்டங்கள் முதலியவற்றை நடைமுறைபடுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல்.
24. கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தல் போன்றவை..

மருத்துவம்: கால்சியம் என்ற தனிமம் அனைத்து உயிரிகளின், உடல் செயல்பாட்டுக்கும் கட்டாயம் தேவையாகும்.
கால்சியம் என்றால் என்ன தெரியுமா?
அதுதான் சுண்ணாம்பு. லத்தீனில் கால்சிஸ் என்ற வார்த்தைக்கு சுண்ணாம்பு என்பதுதான் பொருள். பூமியின் மேலோட்டில் கிடைக்கும் சாம்பல் நிற தனிமம் தான் கால்சியம் ஆகும்.
பூமியில் கிடைக்கும் தனிமங்களில் 5வது இடத்தைப் பெற்றுள்ளது. நம் உடலில் அதிகமாக இருக்கும் தனிமங்களில் கால்சியமும் ஒன்று. மனித உடலின் 70 கிலோ மனிதனின் எடையில், 2% கால்சியம் உள்ளது. அதாவது 1,400 கிராம் கால்சியம் ஆண்களுக்கும், பெண்களுக்கு 1 கிலோவும் இருக்கிறது.

கால்சியத்தின் சலிப்பற்ற பணி.!
கால்சியம் நம் உடலில் என்னென்ன பணிகள் செய்கிறது தெரியுமா? அலுப்பில்லா, அயரா உழைப்பாளி கால்சியம்! உயிர்காக்கும் நண்பனும் கூட.
நம் உடலின் தசைகள் சுருங்கி விரியவும், இதயத்தின் இனிமையான தாள லய துடிப்பிற்கும் கால்சியத்தின் உதவிதேவை. அது மட்டுமல்ல காலில் முள்குத்திய / நெருப்பு சுட்டுவிட்டதா ஆ. வலிக்கிறதே! என வலிஉணர அந்த செய்தியை நரம்புகள் மூலம் மூளைக்கு கொண்டு செல்லவும், ஏதாவது வெட்டுக்காயம் ஏற்பட்டால் அதன் வழியே இரத்தம் வெளியேறுவதை தடுத்து, இரத்தம் உறைய வைக்கவும் கால்சியம் கட்டாயம் தேவை.
செல்களுக்கு இடையே, வேதி சமிக்ஞைகள் சரிவர செல்ல கால்சியம் வேண்டும். அதுமட்டுமல்லாமல் நாம் உண்ணும் உணவினை ரசிக்க, ருசிக்க மற்றும் கரைவதற்கு தேவையான எச்சிலை சுரக்க உதவிசெய்கிறது.
பொதுவாக 30 வயதிற்கு மேல் ஆகிவிட்டால் எலும்பிலுள்ள கால்சியம் மெதுவாக குறைய ஆரம்பிக்கும். ஏனெனில் நம்முடைய எலும்பு வளர்ச்சி அத்துடன் நின்றுவிடும். ஆகையால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க தொடர்ந்து உடலுக்கு வேண்டிய கால்சியத்தை தந்து கொண்டே இருக்க வேண்டும்.
பொதுவாக நாம் உண்ணும் உணவில் கால்சியம் சத்து குறைவாகவே உள்ளது. இது தொடர்ந்து நிகழ்ந்தால் எலும்பிலுள்ள கால்சியம் குறைவதால், அரிமானம் ஏற்பட்டு எலும்பின் உறுதி குறையும்.
இந்நிலை குழந்தை பருவத்தில் ஏற்பட்டால் எலும்பு வலுவின்றி வளைந்து ரிக்கெட்ஸ் என்ற நோய் வரும். நமக்கு தினமும் சுமார் 400 முதல் 500 மில்லி கிராம் வரையிலான கால்சியம் வியர்வை, சிறுநீர் மற்றும் மலத்தின் வழியே வெளியேறுவதால் உடலின் கால்சியம் அளவு தினந்தோறும் குறைகிறது.

கால்சியத்தின் பணிகள்:
கால்சியம் பெருங்குடல் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது
எடை சீராக இருக்க உதவுகிறது
பெண்களுக்கு முதுகுவலி வராமல் பாதுகாக்கிறது
கால்சியம் குறைந்தால்..!
உடல்எடை அதிகரிக்கும்
இரத்தக்குழாய்களின் கழுத்தை நெருக்கி இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.
பல் ஆடும்
பற்களுக்கிடையே இடைவெளி ஏற்படும்
பாக்டீரியா பற்களை தாக்கி பற்சிதைவு, வீக்கம் மற்றும் இரத்தம் வடிதல் போன்றவையும் ஏற்படுகிறது.


பெண்களின் பிரச்சனை, கால காப்பாளன்.!
கால்சியம் பெண்களுக்கு மாதவிடாய்க்கு முந்தைய நாட்களின் மனநிலையை ஒழுங்குபடுத்துகிறது. இல்லையெனில் பெண்களுக்கு தசைப்பிடிப்பு, எரிச்சல், மன அழுத்தம் போன்றவை ஏற்படும். மாதவிடாய் சமயத்தில் தினம் 1 கிராம் கால்சியம் எடுத்துக் கொண்டால் பெண்களுக்கு, மாதவிடாயின் தொந்தரவு இருக்காது. அப்போது ஏற்படும் தலைவலி, மனம்சரி இல்லாமை(Moodout), வயிறு உப்பிசம், கை கால் வலி மற்றும் போன்றவற்றை கால்சியம் நீக்குகிறது.
மேலும் அப்போது உண்டாகும் வயிற்றுவலியையும் கால்சியம் துரத்தி விடும். மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை கால்சியம் நீக்கிவிடுகிறது என பல்வேறு ஆய்வுகள் விளக்குகின்றன. மேலும் பெண்களின் உடம்பில் சுரக்கும் ஈஸ்டிரோ ஜென் என்ற ஹார்மோன் கால்சியம் உட்கிரகிப்புக்கு மிகவும் உதவுகிறது.

தீபாவளிக்கு வெளியான கொடி, காஷ்மோரா படங்களின் வசூல் பற்றி ஆளாளுக்கு ஆதாரமில்லாத தகவல்களை சகட்டு மேனிக்கு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ்அப்பிலும் இப்போதெல்லாம் வசூல் தகவல்கள் வலம் வரஆரம்பித்துவிட்டன. அத்தனையும் அடிப்படையில்லாத தகவல்கள். தீபாவளி படங்களின் வசூல் நிலவரம் என்ன? என்று தெரிந்து கொள்வதற்காக காஷ்மோரா படத்தின் தயாரிப்பு தரப்பை தொடர்பு கொண்டு கேட்டபோது...அதிகாரபூர்வமான வசூல் நிலவரத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டனர்..... தமிழ்நாட்டில் ஏறக்குறைய 450 தியேட்டர்களில் வெளியான காஷ்மோரா படம் முதல் நாள் அன்று தமிழகத்தில் 5 கோடி வசூலித்திருப்பதாக சொல்கிறார்கள். ஆந்திராவில் காஷ்மோரா தெலுங்கு பதிப்பு 4 கோடியை வசூலித்திருக்கிறதாம்.
காஷ்மோரா படம் உலகஅளவில் ஒட்டுமொத்தமாக 12 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்கின்றனர்.இரண்டாவது நாளில் அதாவது தீபாவளி அன்று.... தமிழகத்தில் 8 கோடியை வசூலித்த காஷ்மோரா ஆந்திராவில் 3.5 கோடி வசூலித்திருக்கிறது. அமெரிக்காவில் ஒன்றரை கோடி, யுனைடெட் அராப் எமிரேட்ஸ் 1 கோடி என உலக அளவில் 15 கோடியையும் வசூலித்திருக்கிறது. மூன்றாவது நாளிலும் 15 கோடியை வசூல் செய்திருப்பதாகவும், கார்த்தி நடித்த படத்திலேயே மிகப்பெரிய வெற்றிப்படம் என்ற பெயரை காஷ்மோரா படம் பெற்றிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
காஷ்மோரா படத்தின் வசூல் நிலவரங்களை கேட்டு தெரிந்து கொண்ட கார்த்தி மிக மகிழ்ச்சியாக இருக்கிறாராம்.

சென்னை: நடிகர் ஆர்யாவின் புதிய படமான 'கடம்பன்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.
'மஞ்சப்பை' திரைப்பட இயக்குனர் ராகவன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா 'கடம்பன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆர்யா மலைவாழ் இளைஞனாக நடிக்கிறார். இதற்காக தனது உடல் எடையை அதிகரித்து நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா நடிக்கிறார். இந்தப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று மாலை வெளியிடப்பட்டது.
அதனது தொடர்ந்து படத்தின் டீசரும் வெளியிடப்பட உள்ளது.
மாலை 5 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் முதல் போஸ்டரை நடிகர் கார்த்தி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 5.30 மணிக்கு மற்றொரு போஸ்டரை விஷால் வெளியிட்டார்.
அதன் தொடர்ச்சியாக இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிடவிருக்கிறார்.

அனைத்து பணியாளர்களும், இனி "சம வேலைக்கு சம ஊதியம்" பெரும் வகையில் தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
அதாவது, தினசரி ஊதியம், தற்காலிக பணியாளர், ஒப்பந்த ஊழியர் ஆகியோருக்கு, நிரந்தர பணியாளர்களுக்கு அளிக்கப்படும் அதே அளவு ஊதியத்தை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில தற்காலிக பணியாளர்கள், தங்களுக்கு மிகவும் குறைந்த பட்ச சம்பளத்தை வழங்குவதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள் ஜே.எஸ்.காதர், எஸ்.ஏ.
போப்டே ஆகியோரடங்கிய அமர்வு விசாரித்தது.இது குறித்து விளக்கமளித்த நீதிபதிகள், ஒரு பணிக்காக தேர்வு செய்யப் படும் ஊழியருக்கு அதே பணியைச் செய்யும் நிரந்தர பணியாளருக்கு அளிக்கப்படும் அளவுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்றும், இந்த ஊதியத்தை வைத்துகொண்டு, தானும் தன்னைச் சார்ந்தவர்களைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளார்கள்" எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், சர்வதேச பொருளாதார, சமூக, கலாசார உரிமை தொடர்பாக 1966-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட விதியில் இந்தியாவும் கையெழுத்திட்டு, இந்த விதி, ஏப்ரல் 10, 1979 முதல் அமலுக்கு வந்துள்ளது என்பதையும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பேசிய நீதிபதிகள், ஊழியர்களை பொறுத்தவரையில், நிரந்தரப் பணியாளரா அல்லது தற்காலிக பணியாளரா என்ற பேதம் கிடையாது என்றும், இனி ஊதியம் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என தெளிவாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                
அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற அரசு நிர்வாகத்தைக் கொண்டு வருதல்
அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிபவர்களின் பொறுப்புணர்வை மேம்படுத்தி விரைவாக பணி செய்ய வைத்தல்
எந்த ஒரு குடிமகனுக்கும் பதிலளிக்கும் கடமை அரசாங்கத்திற்கும் அதன் அதிகாரிகளுக்கும் உண்டு என்பதை உணரச் செய்தல்
அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்த தகவலைப்பெற விரும்பும் குடிமக்களுக்கு அதைக் கொடுக்க வழிவகை செய்வதோடு லஞ்ச-ஊழலைத் தடுத்தல்.
தகவல் உரிமை என்றால் என்ன?
தகவல் உரிமை என்பது இந்தச் சட்டத்தின் கீழ் எந்தவொரு அரசு மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனத்தின் கையிலோ அல்லது கட்டுப்பாட்டிலோ உள்ள தகவலைத் தெரிந்து கொள்ளும் மற்றும் தகவலைப் பெறும் உரிமையை குறிக்கும்.
அரசு அலுவலகத்திலுள்ள பணி ஆவணங்கள், பதிவேடுகளை மேலாய்வு செய்வதற்கு
ஆவணங்கள் அல்லது பதிவேடுகளின் குறிப்புகளை எடுத்தல், சான்றளிக்கப்பட்ட நகல்களைப் பெறுதல்
பொருட்களின் சான்றளிக்கப்பட்ட மாதிரிகளைப் பெறுதல். (எ.கா. – அரசு கட்டிடம் கட்டும் போது சிமெண்ட் கலவை மாதிரிகளைப் பெறுதல்)
இப்படிப்பட்ட தகவலைக் கணினியில் அல்லது வேறு சாதனம் எதிலும் தகவல் பதிவு செய்யப்பட்டிருக்கும்பொழுது , அதனை குறுந்தகடுகள், ஒலி நாடாக்கள், ஒலி-ஒளிக்காட்சி நாடாப் பேழைகள், மின்னஞ்சல் அச்செடுப்புகள் அல்லது எந்த வடிவிலும் தகவலைப்பெறும் உரிமையும் இதில் அடங்கும். (எ.கா) ரேஷன் கடையில் எத்தனை குடும்ப அட்டைக்கு ரேஷன் பொருட்கள் கொடுக்கப்பட்டு வருகிறது என்பதைக் கேட்பது தகவல் உரிமை.
தகவல் உரிமை எதற்காக?
இந்திய அரசியல் சாசன சட்டத்தின் விதி 19(1) பகுதியின் கீழ் தகவல் என்பது மக்களின் அடிப்படை உரிமையின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றில் வெளிப்படையான மற்றும் பொறுப்பான செயல்பாடுகளை உறுதிப்படுத்துவதற்கு.
ஊழல் செய்பவர்களை அம்பலப்படுத்தவும் லஞசம் இல்லாமல் சேவையைப் பெறுவதற்கும் குடிமக்களுக்கு உதவுகிறது.
ரகசியக் காப்புச் சட்டம் 1923 அரசின் செயல்பாடுகளை மூடி மறைக்கின்றது. இதை மாற்றி மக்கள் பங்கேற்பை உறுதி செய்து மக்களின் தேவைக்காக அரசை செயல்பட வைக்கப் பயன்படுகிறது.
இந்திய அரசியல் சாசன சட்டத்தில் குறிப்பிட்டுள்ள முக்கியமான குறிக்கோள்களான சமத்துவம், சமூகநீதி, பாகுபடுத்தாமை, இறையாண்மை, வாழ்க்கைக்கான உரிமை, சுதந்திரம் போன்ற அம்சங்களை நிறைவேற்ற தகவல் உரிமை அவசியமாகிறது.
என்னென்ன தகவல் கேட்கலாம்?
நாம் அரசிடம் எது பற்றி விண்ணப்பித்தாலும் 30 நாட்களுக்குள் விசாரணை செய்து மனுதாரருக்கு உரிய தகவலைத் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் 20.08.08 தேதியிட்ட (அரசாணை எண் 114) சொல்கிறது. அதன்படி நாம் கொடுத்த மனுவிற்கு பதில் தரவில்லை. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அது பற்றிய காரணங்களைக் கேட்கலாம். அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பரிந்துரைத்த அதிகாரியின் அறிக்கை நகல், வாக்குமூலங்களின் நகல்களைக் கேட்கலாம்.
அரசுத் துறைகள் தங்களுக்கு வந்த விண்ணப்பங்களுக்கு எத்தனை நாட்களுக்குள் சான்று கொடுக்க வேண்டும். அதற்கான கட்டணம் எவ்வளவு, செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்ற விவரங்கள் அடங்கிய மக்கள் சாசன நகல்களைக் கேட்கலாம்.
அரசு ஆணைகள், அறிவுரைகள், சுற்றறிக்கைகள், வரைபடங்கள், படிவங்கள், விதிமுறைகள், நமக்கோ வேறு யாருக்கோ, உரிமம், அனுமதி, கடன், அரசு சலுகைகள் ஏற்கெனவே அளிக்கப்பட்டவற்றிற்கு (அ) மறுக்கப்பட்டமைக்கு ஆவண நகல்கள் மற்றும் தகவல்.
அரசு சார்ந்த நிறுவனங்கள், அரசு அளித்த நிதியிலிருந்து செய்யப்பட்ட செலவுகளின் செலவுச் சீட்டுகள், மருத்துவமனைகளில் மருந்துகள், எக்ஸ்ரே படங்கள் போன்றவற்றின் இருப்பு, மருத்துவர்கள் இருப்பிடம், பணி நேரம் பற்றிய விவரங்கள்.
கணவன், மனைவி பணிப் பதிவேடுகளின் நாமினி விவரங்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன் சார்ந்த விவரங்கள், குற்றப்பத்திரிகைகள், தண்டனைக்கோப்புகள், சம்பளப்பட்டியல் விவரங்கள், வாக்குமூல நகல்கள், அசையும், அசையா சொத்துகள் வாங்கிய விவரங்கள்.
வீட்டு வரி விதிப்பின் விதிமுறைகள், சாலை, பாலம், பிற கட்டிடங்கள், தெரு விளக்குகள், குழாய்கள், கிணறுகள் ஆகியவை எப்போது? எப்படி? யாரால்? எவ்வளவு நீளம் – அகலம்- பருமன் தன்மையில் அமைக்கப்பட்டது போன்ற விவரங்கள்.
கிராம சிட்டா அடங்கல் ‘அ’ பதிவேடு, நிலங்கள், கிராமத்தின் வரைபடம், சாகுபடிக் கணக்கு, நகராட்சியிலும், மாநகராட்சியிலும், கிராமத்திலும் – புறம்போக்கு நிலங்கள், மரங்கள், ஆக்கிரமிப்புகள், ஆறு, ஏரி, குளம், குட்டை, கால்வாய்கள், நீளம், அகலம், ஆழம், விஸ்தீரணம், பட்டா மாற்றம், பட்டாபிரிப்பு, நிலம் ஏற்கெனவே கையகப்படுத்தியது, கையகப்படுத்தப்போவது, அளிக்கப்பட்ட வீட்டுமனைப்பட்டா அந்த மக்களுக்கு உண்மையில் போய் சேர்ந்ததற்கான ஒப்புதல் சீட்டுகள், இன்றைய நிலையில் அவர்களுக்கு அளித்த அந்த மனை உள்ளதா? அதில் கட்டிடம் கட்டியது ஆகிய விவரங்கள்.
சாதிச்சான்று பெறும் முறைகள், பெறத் தேவையானவைகள், போலியான சாதிச்சான்றுகளைப் பெற்ற விவரங்கள், அதன் விசாரணை ஏடுகள்...என பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை அனைத்தையும் கேட்கலாம்.
தகவல் கொடுக்க வேண்டியவர்கள்?
பொது அதிகார அமைப்பு: அதாவது அனைத்து மத்திய , மாநில அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், வங்கிகள், வாரியங்கள் மற்றும் பாராளுமன்றத்தால் நிறுவப்பட்ட உரிய அரசால் ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள்.
அரசுக்கு சொந்தமான கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகள் மற்றும் அரசால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கணிசமாக நிதி வழங்கப்பட்ட அரசு சாரா நிறுவனங்களும் ஆகும்
என்னென்ன முறையில் தகவல் பெறலாம்
மத்திய மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அரசின் பொதுத்துறை மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களிலிருந்து
ஆவணங்கள், மற்றும் பதிவேடுகளைப் பெறலாம், பார்வையிடலாம்.
குறிப்பெடுக்கலாம், பக்கங்களை நகலெடுக்கலாம், ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளின் சான்றிட்ட நகல்களைப் பெறலாம்.
சான்றிட்ட பொருள் மாதிரிகள், உருவமாதிரிகள் பெற்றிடலாம்.
சி.டி., ஃப்ளாப்பிகள், டேப்புகள், வீடியோ கேசட்டுகள் அல்லது வேறு வகையான மின்னணு வழிகளில் பெறலாம், அல்லது அத்தகு மின்னணு சாதனங்களில் இருந்து அச்சு எடுத்திடலாம்.
தகவல் கொடுக்க வேண்டிய அதிகாரிகளின் கடமைகள்
தகவல் பெறுவதற்காக இந்தச் சட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளப் பொதுமக்களுக்கு குறைந்தபட்ச வழி அமைத்துத்தரும் பொருட்டு, இணையம் உள்ளிட்ட பல்வேறு தகவல் வழியாகவும், முறையான கால இடைவெளிகளில் ஒவ்வொரு அரசு அலுவலகமும் தாமாகவே முன்வந்து தகவல் வழங்க வேண்டும் ( த.பெ.உ..சட்டம் 4(2)).
ஒவ்வொரு தகவலும் விரிவான முறையில் தரப்படவேண்டும். பொதுமக்கள் எளிதில் அணுகிப் பெறக்கூடிய வடிவிலும், முறையிலும், தகவல் இருக்கும்படி செய்ய வேண்டும் (த.பெ.உ.சட்டம் 4(3))
கணினிப்படுத்துவதற்குப் பொருத்தமான எல்லாப் பதிவேடுகளையும் கிடைக்கக்கூடிய வள வாய்ய்ப்புகளுக்கு உட்பட்டு நியாயமான காலத்திற்குள் கணினிப்படுத்தவேண்டும்.
இத்தகைய பதிவேடுகளை எளிதில் அணுகிப் பெறக்கூடியவாறு இணைய தளத்தில் வெளியிடவேண்டும்.
செலவுச் சிக்கனம், உள்ளூர் வழிமுறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு எல்லா விவரப் பொருள்களும் பரப்பப்படவேண்டும். பரப்புதல் என்பது அறிவிப்புப் பலகைகள், செய்தியேடுகள், பொது அறிவிப்புகள், ஊடகப் பரப்பல்கள், இணையம் அல்லது வேறு எந்த வழியிலும் தகவல் அறியத்தருதல் அல்லது பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்தல் என்பதைக் குறிக்கும்.
தகவலை யாரெல்லாம் கேட்கலாம்?
இந்தியக் குடிமகன் யார் வேண்டுமானாலும் தகவலைக் கேட்டுப்பெறலாம். ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி அனைத்து வயதினரும் கேட்கலாம். (பிரிவு–3) வெளிநாட்டினர் இச்சட்டப்படி தகவல் கேட்க முடியாது.
காரணம் சொல்லத் தேவையில்லை
தகவல் கேட்கும்போது அதிகாரிகளிடம் அதற்கான காரணம் சொல்லத் தேவையில்லை. அதிகாரிகளும் மனுதாரரிடம் காரணம் கேட்கக்கூடாது (பிரிவு6(2)).
யாரிடம் கேட்கலாம்?
ஒவ்வொரு அரசுத்துறை அலுவலகத்திலும் ஒரு “பொதுத் தகவல் அலுவலர்” ஒரு மேல் முறையீட்டு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் கோருபவர் – பொதுத் தகவல் அலுவலரிடம் மனு செய்யலாம்.
விண்ணப்பம் எழுத யார் உதவ வேண்டும்?
ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் தற்போது நியமிக்கப்பட்டுள்ள துணை பொதுத் தகவல் அலுவலர் அல்லது பொதுத் தகவல் அலுவலர் – விண்ணப்பங்களை நிரப்புவதற்கும், மேல்முறையீடுகளை செய்வதற்கும் மனுதாரருக்கு உதவி செய்ய வேண்டும். வாய்மொழி விண்ணப்பங்களை எழுத்து வடிவில் மாற்றவும் இரு அதிகாரிகளும் உதவி செய்ய வேண்டும். உடல் ஊனமுற்ற்வர்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் பொதுத் தகவல் அலுவலர் செய்து தர வேண்டும்.
தமிழிலேயே விண்ணப்பிக்கலாம்!
தமிழக அரசுத்துறை சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கு தமிழிலேயே விண்ணப்பிக்கலாம். அதற்கு பொதுத் தகவல் அலுவலர் தமிழிலேயே பதில் தர வேண்டும். டெல்லியிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு தமிழிலும் விண்ணப்பம் அனுப்பலாம். ஆனால் டெல்லிக்கு ஆங்கிலத்தில் அனுப்புவது நல்லது.
தபாலில் அனுப்பும் முறை
விண்ணப்பங்களை சாதாரண தபாலிலேயே அனுப்பலாம். ஆனால், பதிவுத் தபாலில் அனுப்புவதே நல்லது. அப்போது அதிகாரிகள் விண்ணப்பம் வரவில்லை என ஏமாற்ற வாய்ப்பிருக்காது.
அஞசல் உறை மீது விலாசம் எழுதும்போது, அனுப்பப்படும் அதிகாரியின் பதவியின் பெயர், அவரது அலுவலகத்தின் பெயர், முகவரி மட்டும் எழுதினால் போதும். அவ்வாறு அனுப்பும்போது அதிகாரிகளால் மனுவை திருப்பி அனுப்ப முடியாது.
நீங்கள் மனுக்கள் அனுப்பியதற்கு சான்று இருந்தால் மட்டும் போதாது. சம்மந்தப்பட்ட அலுவலர் அதைப் பெற்றுக்கொண்டார் என்பதற்கான ஒப்புதல் சீட்டே முக்கிய ஆதாரமாகும். அது இல்லை என்றால் மேல் முறையீடுகள் எடுபடாமல் போக வாய்ப்புண்டு.
முகவரிகள் தெரியவில்லையா?
நாம் அரசிடம் எது பற்றி விண்ணப்பித்தாலும் 30 நாட்களுக்குள் விசாரணை செய்து மனுதாரருக்கு உரிய தகவலைத் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் 20.08.08 தேதியிட்ட (அரசாணை எண் 114) சொல்கிறது. அதன்படி நாம் கொடுத்த மனுவிற்கு பதில் தரவில்லை. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அது பற்றிய காரணங்களைக் கேட்கலாம். அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பரிந்துரைத்த அதிகாரியின் அறிக்கை நகல், வாக்குமூலங்களின் நகல்களைக் கேட்கலாம்.
மாநில அரசு : நீங்கள் தகவல் பெறும் உரிமைச்சட்ட்த்தில் மாநில அரசு அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கும்போது எந்த அலுவலகத்துக்கு அனுப்புவது என்று தெரியவில்லையா? அதற்காக கவலைப்பட வேண்டாம். தங்களது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்புங்கள். அங்குள்ள அதிகாரி அவருக்கு சம்மந்தப்பட்டதல்ல என்றால் பிரிவு 6 (3)ன் படி உரிய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும். அனுப்பிய தகவல் உங்களுக்கு 5 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.
மத்திய அரசு : அதேபோல் முகவரி தெரிந்தால் மத்திய அரசு அலுவலகங்களுக்கு நேரிடையாக அனுப்பலாம். சம்மந்தப்பட்ட அலுவலகம் எது என்று தெரியாவிட்டால் மட்டும் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பவும்.
பெறுநர் :
மத்திய பொது தகவல் அலுவலர் அவர்கள்,
தகவல் பெறும் உரிமை சட்டம் – 2005,
ஊர் ................................. பின்கோடு ......................
மேற்படி காலியாக உள்ள இடத்தில் உங்கள் ஊருக்கு சம்மந்தப்பட்ட தலைமை அஞ்சல் அலுவலகம் இருக்கும் ஊரின் பெயரை தங்கள் பகுதி தபால்காரரிடம் கேட்டு எழுதி விடுங்கள்.
மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பக்கட்டணம் செலுத்தி ரசீது பெற்றும் அனுப்பலாம். தபால் செலவு இல்லை.
மத்திய அரசு நிறுவனங்களுக்கு மட்டும் முதல் மேல்முறையீட்டு முகவரி தெரியாவிட்டால் உங்கள் விண்ணப்பத்தில்
பெறுநர் :
மத்திய பொதுத் தகவல் அலுவலர் மற்றும்
மேல் முறையீட்டு அலுவலர்,
தகவல் பெறும்உரிமைச்சட்டம் – 2005
அஞ்சலகங்களின் இயக்குனர்
சென்னை / கோவை / திருச்சி / மதுரை
(நான்கில் பொருந்தும் ஊர் பெயர் மட்டும் குறிப்பிட வேண்டும்) உறை மீதும் இதே விலாசம்தான் எழுதி அனுப்ப வேண்டும்.
இரண்டாவது மேல் முறையீடு : டெல்லியில் உள்ள மத்திய தகவல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும்.
To
CENTRAL INFORMATION COMMISSION,
IInd floor, August Kranti Bhavan,
Bhikaji Cama Place, New Delhi – 110 066.
Phone No . 011-2616 1137 Fax : 01126186536 www.cic.gov.in
அஞ்சல் உறை மீது இதே விலாசத்தை எழுதவும்.
தவறான முகவரிக்கு அனுப்பினால்...
அனுப்பிய மனுதாரரின் விண்ணப்பத்தில் கேட்ட கேள்விகளுக்கு தகவல் தன்னிடம் இல்லை என்றால், மனுதாரருக்கு மனுவைத் திருப்பி அனுப்பக்கூடாது. அவரே அந்த மனுவினை சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் பொதுத் தகவல் அதிகாரிக்கு 5 நாட்களுக்குள்ளாக அனுப்பிவிட்டு, அவ்வாறு அனுப்பிய தகவலை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.(பிரிவு 6(3)).
தகவல் பெறக் கட்டணம்
மத்திய அரசு அலுவலகம் மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.10. மாநில அரசு அலுவலகம் மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.10, தகவல் கொடுக்க, நகல் எடுக்க- 1 பக்கத்திற்கு ரூ.2, ஆவணத்தை நேரில் பார்வையிட முதல் ஒரு மணி நேரம் இலவசம். அடுத்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.5, பொருள் மாதிரி/உருவ மாதிரிக்கும் அசல் கட்டணம். CD, FLOPPY ஒன்றுக்கு ரூ.50 (G.O.M.S.NO.1012 / PUBLIC (ESH.1 & LEG) DEPT. DT.20.09.2006.
கட்டணம் செலுத்தும் முறை
மாநிலஅரசு தொடர்பான அலுவலகங்களுக்குக் கட்டணம் செலுத்தும் முறை நீதிமன்ற வில்லை ( Court Fee Stamp ) ரூ.10க்கு ஒட்டலாம் (அல்லது பொது தகவல் அலுவலர்............................ அலுவலகம் என்ற பெயரில் ரூ.10 வங்கி வரைவோலை (டி.டி) பெற்று அனுப்பலாம். அல்லது கீழ்க்காணும் தலைப்பில் அரசு கருவூலத்தில் ரூ.10 செலுத்தலாம்.
0075.00 Miscellaneous General Services – 800 Other Receipts BK collection of Fees Under Tamilnadu Right To Information (Fees) Comission Rules – 2005 (DPC00 75 0 00 BK 0006)
மத்திய அரசு தொடர்பான அலுவலகங்களுக்குக் கட்டணம் செலுத்தும் முறை
ரூ.10க்கு டி.டி. அல்லது போஸ்டல் ஆர்டர் மட்டுமே கீழ்கண்ட தலைப்பில் எடுத்து அனுப்ப வேண்டும். (பேங்க், இரயில்வே, தபால்நிலையம், பாஸ்போர்ட் ஆபீஸ், பி.எஸ்.என்.எல்., பாராளுமன்றம் போன்ற மத்திய அரசு அலுவலகங்களுக்கு)
கணவன், மனைவி பணிப் பதிவேடுகளின் நாமினி விவரங்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன் சார்ந்த விவரங்கள், குற்றப்பத்திரிகைகள், தண்டனைக்கோப்புகள், சம்பளப்பட்டியல் விவரங்கள், வாக்குமூல நகல்கள், அசையும், அசையா சொத்துகள் வாங்கிய விவரங்கள்.
Accounts Officer,
Office Of The………………………………………………………………..
ரயில்வே துறைக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்தும் முறை
ரயில்வே துறைக்கு தகவல்களை பெறுவதற்கான கட்டணம் ரூ.10-ஐ போஸ்டல் ஆர்டராகவோ அல்லது ஏதேனும் ஒரு ரயில் நிலையத்தில் உள்ள பயணச்சீட்டு கொடுக்குமிடத்தில் செலுத்தி அதற்கான ரசீதைப் பெற்று விண்ணப்பித்துடன் இணைத்தும் அனுப்பலாம்.
ரொக்கமாகவும் செலுத்தலாம்
மனுதாரர் சம்மந்தப்பட்ட துறைக்கே நேரில் சென்று ரொக்கமாக கட்டணம் செலுத்தலாம். செலுத்தியபின் ரசீது பெற்றுக் கொள்வது முக்கியம்.
கட்டணச்சலுகை யாருக்கு?
வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவரானால் அதற்கான சான்று நகல் இணைத்தால் போதும். விண்ணப்பம் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளப்படும். (குறைந்த வருமானம் உடையோர் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வதற்கான சான்றினை வட்டாட்சியரிடம் பெறலாம்)
எத்தனை தகவல் கேட்கலாம்?
ஒருவர், ஒரே விண்ணப்பத்தில் எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம். (அதிகபட்சமாக 10 முதல் 15 கேள்விகளுக்குள் கேட்பது நல்லது)
மூன்றாம் நபர் என்பவர் யார்?
விண்ணப்பிப்போர், தகவல் தரும் அலுவலகம் இரண்டிற்கும் அப்பாற்பட்ட தகவலுக்குட்பட்ட நபர் மூன்றாம் நபர் எனப்படுவார்.
இந்த மூன்றாம் நபரால் ரகசியமாக பாவிக்கப்பட்டு, ரகசியமாக பாவிக்கப்படுவதற்காக அளிக்கப்பட்ட ஆவணம், பதிவேடு, தகவல் ஆகியவை மூன்றாம் நபர் சார்ந்த தகவல் எனப்படும்.
மூன்றாம் நபர் குறித்த தகவல்கள்
மூன்றாம் நபர் பற்றிய ரகசிய ஆவணங்கள் தவிர மற்றவற்றைத் தரலாம். நமக்கு தரும் முன் அந்த மூன்றாம் நபருக்கு 5 நாட்களுக்குள் அறிவிப்பு தரவேண்டும். அந்த மூன்றாம் நபர் 10 தினங்களுக்குள் பதில் தர வேண்டும். ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் பாதிப்பைத் தராத தகவலை மனு செய்த 40 தினங்களுக்குள் அளித்தல் வேண்டும்.
தகவல் பெறுவதற்கான கால அவகாசம்
தகவல் தர (அ) நிராகரிக்க (பிரிவு 7 (1))....................................... 30 நாட்கள்
சம்பந்தமில்லா துறைக்கு அனுப்ப்ப்பட்ட மனுவை சரியான துறைக்கு
அனுப்ப தேவைப்படும் கூடுதல் நாட்கள் (பிரிவு 6(3) )....................... 05 நாட்கள்
மூன்றாம் நபர் பற்றிய தகவலுக்கு கடிதம் எழுத பிரிவு 11(1)............ 05 நாட்கள்
மூன்றாம் நபர் பதில் அளிக்க (பிரிவு 11 (2) ).............................. 10 நாட்கள்
மூன்றாம் நபர் பற்றிய தகவல் அளிக்க (பிரிவு 11 (3) )........................... 40 நாட்கள்
குறைபாடுடைய பதில் (அ) மனுவிற்கு, முதல் மேல் முறையீடு
செய்ய ( பிரிவு 19 (1) ) ............................................................................ 30 நாட்கள்
இரண்டாம் முறையீடு (ஆணையத்திற்கு) செய்ய ( பிரிவு 19 (3) )...... 30 நாட்கள்
48 மணி நேரத்தில் கொடுக்க வேண்டிய தகவல்
கேட்கப்படும் தகவல் ஒருவரின் உயிர் அல்லது சுதந்திரம் தொடர்பானதாக இருப்பின், விண்ணப்பித்த 48 மணி நேரத்திற்குள் வழங்கப்படவேண்டும்.
மனு எழுதும் முறை
இதற்கென்று தனியாக விண்ணப்பப் படிவம் ஏதும் இல்லை. ஒரு வெள்ளைத்தாளில் கையால் மனு எழுதியோ அல்லது டைப் செய்தோ அனுப்பினால் போதும். தமிழிலேயே மனு எழுதலாம். ஆங்கிலம் (அ) இந்தி (அ) அந்தந்த மாநில மொழியிலும் மனு எழுதலாம்.
மாதிரி விண்ணப்பங்கள்
ரேசன் கார்டு தொடர்பான மாதிரி விண்ணப்பம்
பட்டா தொடர்பான மாதிரி விண்ணப்பம்
பஞ்சாயத்தில் நடைபெறும் ஊழலை வெளிக்கொண்டுவர மாதிரி விண்ணப்பம்
எப்போது மறுக்கப்படுவதாக அர்த்தம்
விண்ணப்பம் பொது தகவல் அலுவலருக்கு கிடைத்த 30 நாட்களுக்குள் தகவல் கொடுக்கப்படாமல், எவ்வித செயல்பாடும் இல்லையெனில் – தகவல் மறுக்கப்பட்டதாக அர்த்தம்.
முதல் மேல் முறையீடு
30 நாட்களுக்குள் பதில் கொடுக்கப்படவில்லை எனில், அதே துறையின் மேல் முறையீட்டு அலுவலருக்கு மேல்முறையீடு செய்யவேண்டும். இதற்கு கட்டணம் இல்லை பிரிவு – 19 (1) மேல்முறையீடு செய்யும்போது ஏற்கெனவே நாம் விண்ணப்பித்த மனுவின் நகலை இணைக்க வேண்டும்.
பதிலில் திருப்தி இல்லை என்றால்?
விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பதில் கொடுத்துவிட்டார்கள். கொடுத்த பதிலில் உண்மை இல்லை. திருப்தி இல்லை என்று நினைத்தால், அதே துறையின் மேல்முறையீட்டு அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம். அப்படி செய்யும்போது மேல்முறையீட்டு மனுவுடன் முதலில் விண்ணப்பித்த மனுவின் நகலையும், பொது தகவல் அலுவலர் கொடுத்த பதில் கடிதத்தின் நகலையும் இணைக்க வேண்டும். இவ்வாறு மேல்முறையீடு செய்வதற்கும் கட்டணம் இல்லை.
இரண்டாவது மேல் முறையீடு
முதல் மேல் முறையீடு அனுப்பிய 30 நாட்களுக்குள் தகவல் கொடுக்கவில்லை என்றாலும், கொடுத்த தகவலில் உண்மை இல்லை, திருப்தி இல்லை என்று நினைத்தாலும் தகவல் ஆணையத்திடம் இரண்டாவது மேல்முறையீடு செய்யலாம். இவ்வாறு மேல்முறையீடு செய்யும்போது முதலில் பொது தகவல் அலுவலருக்கு அனுப்பிய மனுவின் நகல், முதல் மேல்முறையீடு செய்த மனுவின் நகல், திருப்தி இல்லா பதில் கடிதத்தின் நகல், முதல் மேல்முறையீடு செய்த மனுவின் நகல், ஆகிய அனைத்து ஆவணங்களுடன் ஆணையத்திடம் மேல் முறையீடு செய்ய வேண்டும். இதற்கும் கட்டணம் இல்லை. பிரிவு – 19(3).
மனுவை நிராகரித்தாலும் காரணம் சொல்ல வேண்டும்
மனுதாரரின் விண்ணப்பம் கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் கட்டணம் பெற்றுக்கொண்டு அந்த தகவலை அளிக்க வேண்டும். மனுவை நிராகரித்தாலும் பிரிவுகள் 8.9ன்படி அதற்கான காரணங்களை மனுதாரருக்கு 30 நாட்களுக்குள் தெரிவிக்கவேண்டும். அத்தகைய நிராகரிப்பிற்கு எதிராக மனுதாரர் எவ்வளவு கால அளவிற்குள், யாரிடம் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்ற விபரங்களையும் தெரிவித்தல் வேண்டும்.
30 நாட்களுக்கு பிறகு கொடுக்கப்படும் தகவலுக்கு கட்டணம் இல்லை
30 நாட்களுக்கு பிறகு செய்யப்படும் இரண்டு மேல் முறையீடுகளுக்கும், நினைவூட்டல் களுக்கும் கட்டணம் ஏதும் இல்லை. (பிரிவு 18), 30 நாட்களுக்குள் தகவல் தரப்படவில்லையெனில், அதன் பிறகு கொடுக்கப்படும் எந்தத் தகவல்களுக்கும் ஆவணங்களுக்கும் (ஒரு பக்கத்திற்கான ரூ.2, CD, Floppy- க்கான ரூ.50 ) கட்டணம் செலுத்த தேவையில்லை (பிரிவு 7 (6) ).
அதிகாரிக்கு அபராதங்கள் - தண்டனைகள்
பொது தகவல் அதிகாரி தவறு செய்ததாகக் கண்டறியப்பட்டாலோ அல்லது வேண்டும் என்றே தகவல் கொடுக்காமல் இருந்தாலோ, தவறான தகவல் கொடுத்தாலோ நாளொன்றுக்கு ரூ.250 வீதம் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை பொது தகவல் அதிகாரிக்கு தகவல் ஆணையம் அபராதம் விதிக்கலாம். இந்த அபராதத் தொகை சம்பந்தப்பட்ட அலுவலரின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்பட்டு அரசு கஜானாவில் சேர்க்கப்படுகிறது.
தகவல் ஆணையம் தகவல் தராத பொது தகவல் அதிகாரியின் மீது, துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆணையிடலாம் (பிரிவு 20 (1)).
அதிகாரி அபராதம் கட்டினாலும் சரியான தகவல் கொடுக்க வேண்டும்
விண்ணப்பம் பொது தகவல் அலுவலருக்கு கிடைத்த 30 நாட்களுக்குள் தகவல் கொடுக்கப்படாமல், எவ்வித செயல்பாடும் இல்லையெனில் – தகவல் மறுக்கப்பட்டதாக அர்த்தம்.
முதல் மேல் முறையீடு
பொது தகவல் அதிகாரி அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் அபராதம் கட்டினாலும், அதன்பின்பும் சரியான தகவலை மனுதாரருக்கு கொடுத்தாக வேண்டும்.
மனுதாரருக்கு நஷ்டஈடு உண்டு
மனுதாரருக்கு தகவல் கொடுக்கப்படாததால் உண்மையிலேயே அவருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் ஆணையம் கருதுமேயானால், சம்மந்தப்பட்ட அதிகாரி மனுதாரருக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என ஆணையம் தீர்ப்பளிக்கலாம்.
மனுதாரர் மீது வழக்கு தொடர முடியாது
இந்தச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கைக்காகவும் மனுதாரரின் மீது சிவில் அல்லது கிரிமினல் அல்லது வேறு சட்ட நடவடிக்கை எதுவுமே எடுக்க முடியாது
20 ஆண்டுக்கு மேல் உள்ள தகவலையும் கோரலாம்
20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த, நிகழ்ந்த சம்பவம் குறித்து பிரிவு 8(1) (a) (c-1)க்கு உட்பட்டு மனுதாரர் கூறினால் அந்த தகவல் கொடுக்கப்படவேண்டும் பிரிவு 8 (3).
மாநில தகவல் ஆணையம்
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 15ன்படி தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டு அவ்வாணையம், மாநில தலைமைத் தகவல் ஆணையர் ஒருவர், மாநில தகவல் ஆணையர்கள் இருவர் ஆகியோரின் கீழ் 07.10.2005 முதல் இயங்கி வருகிறது. தற்போது 1.1.2013 அன்றைய தேதிபடி தலைமை தகவல் ஆணையருடன் சேர்த்து மொத்தம் 7 தகவல் ஆணையர்கள் மாநில தகவல் ஆணையத்தில் உள்ளனர். மத்திய தகவல் ஆணையம் 8 ஆணையர்களுடன் தற்போது செயல்பட்டுவருகிறது.
ஆணையத்திற்கு நீதிமன்ற அதிகாரம்:
மேல்முறையீடு அல்லது புகார் ஆகியவற்றை விசாரிக்கும்போது உரிமையியல் நீதிமன்றத்திற்குரிய அனைத்து அதிகாரங்களும் ஆணையத்திற்கும் உண்டு. மேலும் தண்டனை விதிக்கவும் கட்டளைகள் பிறப்பிக்கவும் அதிகாரம் உண்டு (பிரிவு 20 (1) (2) ).
விலக்களிக்கப்பட்ட துறைகள் (பிரிவு – 8)
காவல் துறையில் விலக்களிக்கப்பட்டப் பிரிவுகள்:
தமிழகத்தில் பின்வரும் அரசுத் துறைப்பிரிவுகளில் இந்தச் சட்டத்தின் கீழ் தகவல் கோர முடியாது.
1. தனிப்பிரிவு – குற்றப்புலனாய்வுத்துறை சி.ஐ.டி
2. கியூ பிரிவு – குற்றப்புலனாய்வுத் துறை சி.ஐ.டி.,
3. தனிப்பிரிவு
4. பாதுகாப்புப் பிரிவு
5. கோர்செல் சி.ஐ.டி.
6. சுருக்கெழுத்து அமைவனம்
7. மாவட்டத்தனிப்பிரிவுகள்
8. காவல் துறை ஆணையரக புலனாய்வுப்பிரிவுகள்
9. தனிப்புலனாய்வு செல்கள்

பல்வேறு தேசவிரோத குற்றச்செயல்களில் அடைக்கப்பட்ட இஸ்லாமிய மாணவ இயக்க அமைப்பை சேர்ந்த (சிமி) குற்றவாளிகள் , போபால் சிறையில் இருந்து தப்பினர். இதையொட்டி, சிறைத்துறை அதிகாரிகள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பல்வேறு குற்றச்செயல்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட இஸ்லாமிய மாணவ இயக்க (சிமி) குற்றவாளிகள், போபால் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் சென்னை சென்ட்ரல் ர யில் நிலைய வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளும் அடக்கம்.
இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் சிமி இயக்கத்தை சேர்ந்த 8 குற்றவாளிகள், சிறை காவலர் ஒருவரை, கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, தப்பி சென்றனர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தப்பி சென்ற 8 குற்றவாளிகளில் 2 பேர், சென்னை சென்ட்ரல் ரயில் குண்டுவெடிப்பில் கைதான குற்றவாளிகள் ஆவர். 8 சிமி குற்றவாளிகள் தப்பி சென்றதையடுத்து, இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை அனுப்பப்பட்டது.
சிறையில் இருந்து தப்பி சென்ற சிமி தீவிரவாதிகளால், தாக்குதல் சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது, அவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்பதால், அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய உளவுத்துறை அறிவுறுத்தியது. தப்பியோடிய தீவிரவாதிகளை பிடிக்க, போலீசார் தீவிரமாக ஈடுபட்டனப்.
இந்நிலையில், தப்பியோடிய சிமி தீவிரவாதிகள், அதே பகுதியில் உள்ள இந்த்கெடி என்ற கிராமத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார், அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள், போலீசாரை தாக்க முயன்றபோது, போலீசார் அவர்களை சுட்டுகொன்றனர். இதில் 8 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையில், சிறையில் இருந்த கைதிகள் தப்பியோடிய சம்பவத்தை தொடர்ந்து, சிறைத்துறை அதிகாரிகள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் மகன் லுத்புதீன் நடித்த பறந்து செல்ல வா என்ற படத்தை, தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்.கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தை இயக்கிய தனபால் பத்மநாபன் இயக்கி உள்ள புதிய படம் பறந்து செல்ல வா. இதில் நாசர் மகன் லுத்புதீன் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். நரேலே கெங் என்ற சிங்கப்பூர் நடிகையும் நடிக்கிறார். 8 பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பி.அருமைச்சந்திரன் தயாரித்துள்ளார். ஜோஸ்வா ஸ்ரீதர் இசை அமைத்துள்ளார், சந்தோஷ் விஜயகுமார், பிரபாகரன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சதீஷ், கருணாகரன், ஆர்ஜே.பாலாஜி, ஞானசம்பந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர்.இது முழுக்க முழுக்க சிங்கப்பூரில் படமாக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து வேலைக்குச் செல்லும் ஹீரோவை அந்த நாட்டு பெண் காதலிக்கிறார். இங்கிருந்து வேலைக்குச் சென்ற இன்னொரு பெண்ணும் காதலிக்கிறார். இந்த முக்கோண காதல் ஹீரோவை ஒரு வில்லங்கத்தில் மாட்டிவிடுகிறது. அதிலிருந்து அவர் தப்பித்து யாரை கைபிடிக்கிறார் என்கிற கதை.
இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் கலைப்புலி இண்டர்நேஷனல் நிறுவனம் வாங்கி அடுத்த மாதம் வெளியிடுகிறது.

தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு வருகிற 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் ஏற்கெனவே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது மதுரை மாநகர வடக்கு செயலாளர் கோ.தளபதியும், மதுரை புறநகர் வடக்கு செயலாளர் பி.மூர்த்தியும் தகாத வார்த்தைகளை பேசி சண்டை போட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாஷிங்டன்
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வரலாற்றில் முதன்முறையாக அந்நாட்டின் அதிபர் பராக் ஒபாமா தனது அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றி இன்று தீபாவாளி கொண்டாடினார்.
இதுதொடர்பாக, வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ 'பேஸ்புக்' பக்கத்தில் ஒபாமா குத்துவிளக்கு ஏற்றும் புகைப்படத்துடன் அவரது தீபாவளி வாழ்த்து செய்தியும் வெளியாகியுள்ளது.
தனது வாழ்த்து செய்தியில் பராக் ஒபாமா கூறியுள்ளதாவது:-
வெள்ளை மாளிகையில் கடந்த 2009-ம் ஆண்டு தீபாவளியன்று முதன்முதலாக குத்துவிளக்கை ஏற்றிவைத்த முதல் அமெரிக்க ஜனாதிபதி என்பதை எண்ணி நான் பெருமிதம் கொள்கிறேன்.
நானும் எனது மனைவி மிச்சேலும் இந்தியா சென்றிருந்தபோது மும்பையில் குழந்தைகளுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடியதை நினைவுப்படுத்திப் பார்க்கிறேன்.
இருளை ஒளி எப்போதும் வெல்லும் என்பதை உணர்த்தும் குத்துவிளக்கை இந்த ஆண்டு எனது அலுவலகத்தில் முதன்முறையாக ஏற்றிவைக்கும் கெளரவம் எனக்கு கிடைத்துள்ளது. இந்த பாரம்பரியத்தை எதிர்கால அதிபர்களும் பின்பற்றுவார்கள் என கருதுகிறேன்.
தீபங்களின் திருநாளான தீபாவளியை அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் கொண்டாடும் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்! நீங்கள் அனவரும் உங்களது அன்புக்குரியவர்களுடன் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ எனது குடும்பத்தின் சார்பில் வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

ஆம்பூர் அருகே அபூர்வ வெள்ளை நிற காக்கையை கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரிய மடைந்தனர்.
வேலூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த வன்னியநாதபுரம் கிராமம், பெருமாள் குட்டை மலைப் பகுதியில் வசித்து வருபவர் கட்டடத் தொழிலாளி ரமேஷ். இவருடைய வீட்டின் அருகே அரிய வகை வெள்ளை நிற காக்கை அடிக்கடி வந்து போகிறது. இந்த அபூர்வ காக்கை குறித்த தகவல் ஆம்பூர் பகுதியில் பரவத் தொடங்கியது.
பொது மக்கள் வன்னியநாதபுரம் சென்று வெள்ளை காக்கையின் வருகைக்காக காத்திருந்து பார்த்துச் செல்கின்றனர்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மூன்றாவது வார இறுதியில் தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை தொடங்குவது வழக்கம். வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் அதிகளவு மழை பெறும். அதன்படி நிகழாண்டு வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி தொடங்கும் என முதலில் எதிர்பாக்கப்பட்டது. பின்னர் வங்கக் கடலில் ஏற்பட்ட வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழக வானிலையில் மாற்றம் ஏற்பட்டு, தமிழகப் பகுதியில் இருந்த ஈரப்பதம் ஈர்க்கப்பட்டது.
தள்ளிப்போனது ஏன்?: இதனால், தமிழகத்தில் வட மாவட்டங்களில் பனிப்பொழிவு தொடங்கியது. இதனால், தமிழகத்தில் வடகிழக்கு பருவழை தொடங்குவது தள்ளிப்போனது. இந்நிலையில், வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததை அடுத்து, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது.
சனிக்கிழமை இரவு முதலே தமிழகத்தில் சென்னை உள்பட சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதிகாலையில் ஆங்காங்கே லேசான மழை பெய்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என்று வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்து உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
3 மாதங்கள் எதிர்பார்க்கலாம்: ஈரப்பதம் நிறைந்த கிழக்கு திசைக் காற்று தென்னிந்திய பகுதியில் பரவியுள்ளதால் பரவலாக மழை பெய்துள்ளது. இதன்மூலம் வடகிழக்கு பருவமழை ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை 3 மாதங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்த ஆண்டு சராசரியாக 44 செ.மீ. வரை பெய்யும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தற்போது தொடங்கியுள்ள மிதமான மழை அடுத்த 48 மணி நேரத்துக்கு பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம். சென்னையைப் பொருத்தவரை விட்டு விட்டு மிதமான மழை பெய்யும்.
திருவையாறில் அதிக மழை பதிவு: கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவையாறில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது. தொழுதூர், வலங்கைமானில் 6 செ.மீ., சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
கடந்த ஆண்டு பருவமழை காலத்தில் சராசரியாக 67 செ.மீ. மழை பெய்துள்ளது. இது வழக்கமான அளவை விட 23 செ.மீ. அதிகமாகும். சதவீத அளவை பார்க்கும் போது 55 சதவீதம் கூடுதலாகும். சென்னையில் சராசரியாக 78 செ.மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் 160 செ.மீ. மழை பெய்துள்ளது. இது 104 சதவீதம் அதிகமாகும் என்றார் அவர்.

7 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடந்த மின்சார ரயில் விபத்தின் மர்ம முடிச்சுக்களைத் தடய அறிவியல் துறை அவிழ்த்துள்ளது. அதன்பிறகும் ரயிலை இயக்கியவரை கண்டுப்பிடிக்க முடியாமல் சி.பி.சி.ஐ.டி போலீஸார் திணறி வருவது வேடிக்கையாக இருக்கிறது.
2009 ஏப்ரல் 29-ம் தேதி அதிகாலை நேரத்தில் சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூருக்கு புறப்பட மின்சார ரயில் பிளாட்பாரத்தில் தயாராக இருந்தது. அதிகாலை நேரம் என்பதால் குறைந்த எண்ணிக்கையிலேயே பயணிகள் ரயிலில் அமர்ந்திருந்தனர். சரியாக 4.58 மணிக்கு புறப்பட்ட ரயில் பிளாட்பாரத்தை கடந்தவுடன் வேகமெடுத்தது. அப்போது பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்துக்கும், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்துக்கும் இடையே சரக்கு ரயில் நின்று கொண்டு இருந்தது.
அதே தண்டவாளத்தில் மின்சார ரயில் சென்றதால் இரண்டு ரயில்களும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகியது. இதன்பிறகே ரயிலை இயக்கியது வழக்கமான டிரைவர் அல்ல, மர்மநபர் என்ற தகவல் தெரிந்தது. விபத்தில் ரயிலை இயக்கியவர் உள்பட 4 பேர் பலியாகினர். இதில் மூன்று பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. அவர்கள் அனைவரும் பயணிகள். இதனால் ரயிலை இயக்கிய நபர் யார் என்ற விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கு ரயில்வே போலீஸிடமிருந்து சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டது. சம்பவம் நடந்து 7 ஆண்டுகளாகியும் இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. குறிப்பாக ரயிலை இயக்கியது யார் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் சி.பி.சி.ஐ.டி போலீஸார் திணறி வந்தனர். இந்த சூழ்நிலையில் குஜராத் மாநிலம், காந்திநகரில் உள்ள குஜராத் தடயஅறிவியல் பல்கலைக்கழக இயக்குநர், பேராசிரியர் என இருவரிடம் வழக்கு தொடர்பாக சில தடயங்களை சேகரிக்க சி.பி.சி.ஐ.டி போலீஸார் கேட்டனர். அதன்படி, அங்கு இருந்து சென்னை வந்த தயா, ராஜேஸ்பாபு ஆகியோர் மர்மநபர் ரயிலை இயக்கியது போல அவர்களும் மின்சார ரயிலை இயக்கிப்பார்த்து சோதனையை நடத்தினர். இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடமும் கொடுத்துள்ளனர். அந்த அறிக்கை எக்ஸ்குளுசிவ்வாக நமக்கு கிடைத்தது.
அந்த அறிக்கையில் ரயிலை இயக்கிய மர்ம நபர் குறித்த சில முக்கியத் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக ரயிலை இயக்கியவர் ஆந்திராவை சேர்ந்த நாகாராஜா என்பதை உறுதி செய்யும் வகையில் ஆதாரங்களுடன் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ரயில் விபத்து குறித்து எந்தவித தடயங்களும் கிடைக்காமல் இருந்தது. குஜராத் தடயஅறிவியல் துறை கொடுத்த அறிக்கையில் அந்த விபத்தை ஏற்படுத்த காரணமான மர்ம நபர் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக ரயிலை இயக்கியது தீவிரவாதி என்று கூட சந்தேகிக்கப்பட்டது. அடுத்து ரயில்வே டிரைவர்களுக்கு இடையே நடந்த மோதலின் வெளிப்பாடு என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த சூழ்நிலையில் ரயிலை இயக்கி விபத்துக்குள்ளாக்கிய சம்பவத்தில் பலியானவர்களின் உடல்களை தடயஅறிவியல் துறையினர் அங்குலம், அங்குலமாக ஆய்வு செய்தனர். அப்போது ரயிலை இயக்கிய நபர் குறித்த தகவல்கள் கிடைத்தது. ரயிலை ஓட்டியது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நாகாராஜா என்று தெரியவந்தது. இதற்கு ஆதாரமாக விபத்தில் சிக்கி இறந்த உடலில் ஒருவரது கையில் தெலுங்கில் நாகாராஜா என்ற பெயர் பச்சை குத்தப்பட்டுள்ளது. அந்த பெயர் அதிகம் உள்ள ஆந்திர மாநிலத்தில் உள்ள 9 மாவட்டங்களிலும், ஆந்திர எல்லையான ஒடிசா மாநிலம் ராஜகடா என்ற மாவட்டத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ராஜகடா என்ற மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், நாகாராஜா தன்னுடைய கணவர் என்று உரிமை கோரினார். உடனடியாக அந்தப் பெண்ணின் மகனுக்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவருக்கும், நாகாராஜாவுக்கும் சம்பந்தம் இல்லை என்று பரிசோதனை முடிவில் தெரிந்தது. இதன்பிறகு திருவொற்றியூரைச் சேர்ந்த ஒருவர் உள்பட 5 பேருக்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் யாருடனுடன் நாகாராஜாவின் ரத்த மாதிரிகள் ஒத்துப்போகவில்லை.
இந்த சமயத்தில் ரயிலை இயக்கிய நபர் நாகாராஜா என்பதை தடயஅறிவியல் துறையினர் சேகரித்த தடயங்கள் மூலம் சொல்கின்றனர். அதாவது, விபத்துக்குள்ளான ரயில் 80 கி.மீட்டரிலிருந்து 100 கி.மீட்டர் வரை இயக்கப்பட்டுள்ளது. சோதனைக்காக தடயஅறிவியல் துறையினர், 80 கி.மீட்டர் வேகத்தில் ஒரு மின்சார ரயிலை இயக்கினர். அந்த ரயில் சென்ட்ரலிருந்து புறப்பட்டவுடன் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்தது. பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்துக்கு வரும்போது பிரேக்கை தடயஅறிவியல் துறையினர் பிடித்தனர். 50 மீட்டர் கடந்த பிறகே பிரேக் பிடித்தது. சரக்கு ரயில் நிற்பதைப்பார்த்த ரயிலை ஓட்டிய மர்மநபர், ரயில் இருந்து கீழே குதித்து இருக்க முயன்று இருக்க வேண்டும். அப்போது அவரது உடல் 50 மீட்டர் தூரத்துக்கு தண்டவாளத்தில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. அதோடு ஒரு கையும் துண்டாகியுள்ளது. ஒருவேளை ரயிலை இயக்கிய மர்மநபர் உள்ளேயே இருந்திருந்தால் அவர் நிச்சயம் இரண்டு ரயில்களும் மோதிய வேகத்தில் அவரது உடல் நசுங்கியிருக்கும். எனவே ரயிலை இயக்கிய மர்மநபர் நாகாராஜா என்று குஜராத் தடயஅறிவியல் துறையினர் அறிக்கை கொடுத்துள்ளனர். இப்போதைக்கு யார் அந்த நாகாராஜா என்பதை கண்டறியவே விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நவம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த விவரம்: சென்னை மாவட்ட அரசினர் தொழில்பயிற்சி நிலையத்தில் காலிப் பணியிடங்கள் உள்ளன. அதன்படி, பணிமனை உதவியாளர், அலுவலக உதவியாளர், தொழில்நுட்பப் பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிமனை உதவியாளர் பணியிடங்களுக்கு என்டிசி-என்ஏசி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 2016 ஜூலை 1இன் படி, பொதுப்பிரிவினர் 30 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். கட்டட வரைவாளர், வெல்டர் பணிகளுக்கு (எஸ்சி) ஆதிதிராவிடர் அருந்ததியர் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அதேபோல், கடைசலர் பணிக்கு பொதுப்பிரிவு பெண்ணுக்கும், இயந்திர வேலையாள் பணிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சீர்மரபினர் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வர்ணம் பூசுபவர் பணிக்கு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அதுபோல், கம்மியர்- இயந்திர தளவாடங்கள் பராமரித்தல் பணிக்கு பொது சுழற்சி முன்னுரிமை இல்லை. மேலும், அலுவலக உதவியாளர் பணிகளுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றும், வயது வரம்பு 30க்குள்ளும் இருக்க வேண்டும்.
பொது சுழற்சி முன்னுரிமை இப்பணிகளுக்கான தகவல் மற்றும் விண்ணப்பங்களை இயக்குநர்-முதல்வர், அரசினர் தொழில்பயிற்சி நிலையம், வடசென்னை-21 என்ற முகவரியிலும், 044-25209268 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிந்துகொள்ளலாம். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பர் 20 ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தீபாவளி பண்டிகை தினமான நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் சுமார் 762 இடங்களில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 123 இடங்களில் பட்டாசு வெடி விபத்துகள் ஏற்பட்டன.
தீபாவளி என்றாலே பட்டாசு தீ விபத்து என்பதும் கூடவே வந்துவிடுகிறது. நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்ற ஒரு பட்டாசு தீ விபத்தில் ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு எரிந்து 2 லட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.
இதுபோன்று, சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் பட்டாசு வெடிக்கப்பட்ட போது ஏற்பட்ட தீ விபத்தில் சரஸ்வதி என்ற கூலித்தொழிலாளி பெண்ணின் குடிசை வீடு பற்றி எரிந்தது.
இதில் அவர் சேர்த்து வைத்திருந்த 10 சவரன் நகை மற்றும் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையத்தில், தீபாவளி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில் விசைத் தறி மற்றும் சாயப்பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் மற்றும் நெசவு நூல்கள் எரிந்து கருகின.
இதே போன்று தமிழகம் முழுவதும் சுமார் 792 இடங்களில் பட்டாசு விபத்து ஏற்பட்டு பல லட்ச ரூபாய் சேதத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியது. இதில் சென்னையில் மட்டும் 123 இடங்களில் பட்டாசு விபத்துகள் ஏற்பட்டதாகவும், இது கடந்த ஆண்டை விட மிக மிக அதிகம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்துகள் பெரும்பாலும் ராக்கெட் வெடிகளால் ஏற்பட்டுள்ளன. 379 தீ விபத்துகள் ராக்கெட் வெடிகள் வெடித்ததால் மட்டுமே நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ரோம்;ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில், நேற்று அதிகாலை, ரிக்டர் அளவில், 6.6 புள்ளி அளவுடன், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இத்தாலியில், நான்கு நாட்களுக்கு முன், அடுத்தடுத்து இரு முறை, சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, நேற்று அதிகாலையில், மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது; இது, ரிக்டர் அளவில், 5.5 ஆக பதிவானது. ரோம் நகரம் முதல் வெனிஸ் வரை, நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை. ஆனாலும், ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்ததாக, முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாலியில், ஆகஸ்ட், 24ல், ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 300க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

சென்னை: சென்னையிலிருந்து, கோவைக்கு தினசரி விமான போக்குவரத்து சேவையை,பொதுத்துறை நிறுவனமான, 'ஏர் இந்தியா' நேற்று துவக்கியது.சென்னையிலிருந்து, கோவைக்கு பல தனியார் விமான நிறுவனங்கள் தினமும் விமானங்களை இயக்குகின்றன. ஏர் இந்தியா நிறுவனம் நேற்று முதல் சென்னையில் இருந்து கோவைக்கு விமான சேவையை துவக்கியது.இந்த விமானம், டில்லியில் இருந்து காலை, 9:45 மணிக்கு புறப்பட்டு, பகல், 12:40க்கு சென்னைக்கு வந்து சேரும். பின், 1:25 மணிக்கு புறப்பட்டு, 2:20க்கு கோவைக்கு வந்து சேரும். பின், 3:05க்கு கிளம்பி, மாலை, 4:15க்கு சென்னை வரும். இங்கிருந்து, 5:05 மணிக்கு கிளம்பி, டில்லிக்கு இரவு 7:50 மணிக்கு போய்ச்சேரும்.
இந்த சேவை, வாரத்தின் அனைத்து நாட்களிலும் செயல்படும். முதல் நாளான நேற்று, டில்லியிலிருந்து சென்னை வழியாக கோவைக்கு, 149 பேரும், கோவையிலிருந்து டில்லிக்கு, 172 பேரும் இந்த விமானத்தில் பயணம் செய்தனர். அறிமுக சலுகையாக, 1,137 ரூபாய் பயண கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குப்வாரா: போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதியில் 4 பாகிஸ்தான் ராணுவ முகாம்களை இந்திய ராணுவம் தகர்த்துள்ளதாக ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் துல்லிய தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு அவ்வப்போது தக்க பதிலடி கொடுத்து வரும் இந்திய ராணுவத்தின் நடவடிக்கையால் கடந்த ஒரு வாரத்தில் பாகிஸ்தான் வீரர்கள் 15 பேர் உயிரிழந்தனர். ஆனால் இதனை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
இதனிடையே பாகிஸ்தான் அத்துமீறலை நிறுத்தாவிட்டால் தக்க பாடம் புகட்டுவோம் என இந்திய ராணுவ தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் எல்லை பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினரை பிரதமரின் அலுவலக இணையமைச்சர் விஜேயந்தர் சிங் பாதுகாப்பு படையினரை சந்தித்து பேசினார்.
அப்போது அவர்களின் வீர, தீர செயல்களை அவர் பாராட்டினார். இதனிடையே ஜம்மு காஷ்மீரில் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவம் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி சுட்டதில் பி.எஸ்.எஃப் ஜவான் ஒருவரும் பெண் ஒருவரும் காயமடைந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹிரா பகுதியில் இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானின் 4 எல்லை நிலைகள் அழிக்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஆர்.எஸ்.புரா, ஹிரா நகர் மற்றும் சம்பாவில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்
வடக்கு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தின் கேரன் செக்டாரில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைப்பகுதியில் இந்திய ராணுவம் மேற்கொண்ட பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் 4 தகர்க்கப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கேரன் செக்டாரில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் மேற்கொண்டதில் 4 பாகிஸ்தானிய முகாம்கள் தகர்க்கப்பட்டன என்று ராணுவ அதிகாரி தெரிவித்தார்.
பாகிஸ்தான் தரப்பில் சில உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாக கூறிய அவர் மேல் விவரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை. சமீபத்தில் இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக் எனப்படும் துல்லிய தாக்குதல் நடத்தியதற்குப் பின்னர் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

1. வாழ்வியல் நெறிமுறைகளை அறிவுறுத்துவதே ஆன்மிகம்
2. வாழ்வின் நோக்கம் அது அடையவேண்டிய இலக்கு இவற்றைத் தெளிவாக விளக்குவதே ஆன்மிகம்
3. வாழ்க்கையை தனக்கும் பிற உயிர்களுக்கும் மனதாலும் உடலாலும் துன்பம் விளைவிக்காத மற்றும் துன்பப்படுவோருக்கு உதவதாகவும் பயனுள்ளதாகவும் அமைத்துக் கொள்வதுவதுதான் ஆன்மிகம்
4. ஆன்மிகம் வெறும் நம்பிக்கை மட்டுமல்ல உண்மையில் தேடுதல் அதுவேயாம்
5. ஆன்மிகத்தைப் பொருத்தமட்டில் கடவுளை நம்புவது அல்லது நம்பாதது இரண்டாம் பட்சமே. ஆன்மாவின் இருப்புக்குறித்த ஆராய்ச்சியே.
ஆன்மிகத் தத்துவம் - உயிர்களின் தோற்றத்தை அறிவியல் துணைக்கொண்டு ஆராய்ந்து அதன் மூலம் வாழ்வின் நோக்கத்தை வரையறுப்பதே ஆன்மிகம்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட 3 வீரர்கள் கஜகஸ்தான் நாட்டில் பத்திரமாக தரை இறங்கினர்.
ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் உள்ள கிரகங்களை ஆய்வு செய்வதற்காக விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையம் அமைத்துள்ளது.
இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக அவ்வப்போது வீரர்- வீராங்கனைகள் அனுப்பி வைக்கப்படுவர்.
அதன்படி, மரபணுக்கள் தொடர்பான மற்றும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ரஷ்யாவை சேர்ந்த அனடாலி இவானிஷின், அமெரிக்காவை சேர்ந்த கேட் ரூபின்ஸ், ஜப்பானை சேர்ந்த டக்குயா ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் தங்களது ஆய்வுகளை முடித்து கொண்ட இந்த 3 பேரும் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தின் மூலம் கஜகஸ்தானில் உள்ள ஸெகஸ்கான் நகரில் பத்திரமாக தரையிரங்கினர்.
3 வீரர்களும் புறப்பட்ட இந்த விண்கலம் புறப்பட்ட 3 மணி நேரத்தில் தரையிறங்கியது.

ராமநாதபுரம்: தேவர் குருபூஜையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பசும்பொன்னில் 3 நாள்களாக நடைபெறும் இவ்விழா கடந்த வெள்ளிக்கிழமை 28-ஆம் தேதி ஆன்மிக விழா தொடங்கியது. நேற்று சனிக்கிழமை காலை லட்சார்ச்சனை பூஜை நடைபெற்றது. கடைசி நாள் விழவாக இன்று குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதைமுன்னிட்டு பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீஸார் ஈடுப்பட்டுள்ளனர். அங்கு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பசும்பொன்னிற்கு வந்த நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் சீனிவாசன், செல்லூர் ராஜு, மணிகண்டன், விஜயபாஸ்கர், உதயகுமார் ஆகியோரும் மரியாதை செலுத்தினார்.
திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கும், பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்திலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருநாவுகரசர், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.
சென்னையில் நடைபெற்ற தேவர் குருபூஜை விழாவில் நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயர் தம்பித்துரை, தமிழக அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, எம்சி சம்பத், ஜெயக்குமார், அன்பழகன், சரோஜா, சிவி ஷண்முகம், உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டியராஜன், எஸ்பி வேலுமணி, தங்கமணி, அதிமுக பிரமுகர்கள் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதேபோல, பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
சமத்துவக்கட்சி சார்பில் அதன் தலைவர் சரத்குமார், நடிகர் விவேக் உள்ளிட்டோர் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேவர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

புதுச்சேரி, 
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை பருவ மழை தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
புதுச்சேரி, தமிழகத்தில் கடந்த 20ம் தேதியே வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால் அதன்படி மழை பெய்யவில்லை.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலில் 800 கிலோ மீட்டருக்கு அப்பால் தோன்றிய குறைந்த தாழ்வு அழுத்த நிலையின் காரணமாக புதுச்சேரி தமிழகத்தில் கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. 
ஆனால் புயல் சின்னம் ஆந்திராவை நோக்கி சென்றதால் புதுச்சேரி, தமிழகத்தில் மழை பெய்யவில்லை. இந்நிலையில் 30-ம் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 
புதுச்சேரியிலும் பிற்பகல் முதல் மழை பெய்து வருகிறது. காலையில் இருந்து வானம் மேக மூட்டத்துடனேயே காணப்பட்டது. மேலும் குளிர்ந்து சீதோஷ்ன நிலையும் நிலவி வருகிறது.
கடந்த பல மாதங்களாக கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டிருந்த புதுச்சேரி மக்கள் தற்போது பருவ மழை பெய்யத் தொடங்கி உள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நியூயார்க்: ஐ. நா., தலைமை அலுவலகத்தில் முதல் முறையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை கொண்டாடுவது தொடர்பான தீர்மானம் கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.சனிக்கிழமை மாலை, நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., தலைமை அலுவலகத்தில், தீபாவளி வாழ்த்து (ஹேப்பி தீபாவளி) என அலங்கார மின்னொளி விளக்குகளால் ஜொலித்தது. இந்த விளக்குகள் மூன்று நாள் மாலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஐ.நா., அலுவலகத்தில் தீபாவளி வாழ்த்து செய்தி ஜொலிக்கும் புகைப்படத்தை, இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் சையத் அக்பரூதீன் டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். இதற்காக அவர் ஐ.நா., தலைவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் தீபாவளியைக் கொண்டாடும் விதமாக நேற்று புதுச்சேரி முழுவதும் போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். தனது வாகனம் முழுவதும் இனிப்புகளை ஏற்றிக் கொண்ட டி.ஜி.பி சுனில்குமார் கௌதம், பணியில் இருந்த அனைத்துக் காவலர்களுக்கும் நேரில் சென்று அதனை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்து அடடே சொல்ல வைத்த்திருக்கிறார். டிஜிபி கொடுத்த இன்ப அதிர்ச்சியில் நெகிழ்ந்து விட்டனர் காவலர்கள்.

புதுதில்லி: எல்லைப்பகுதியில் நமது எதிரிகளுடன் போரிட்டு, வீரமரணம் அடைந்தவர்களின் உயிர் தியாகத்துக்கு இந்த தீபாவளி பண்டிகையை அர்ப்பணிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மான் கி பாத்' வானொலி நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே உரையாற்றிவரும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று நடைபெற்ற 'மான் கி பாத்' 25-ஆவது நிகழ்ச்சியில், வறுமை, கல்வியறிவு, சமூக கொடுமைகள் போன்ற இருள் நீங்குவதற்கான முயற்சிக்கான செய்தியை தீபாவளி விளக்குகள் எடுத்துக்கூறுகின்றன. தீபாவளி இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதால், இந்த பண்டிகை மக்களை ஒன்றிணைக்கும் பண்டிகையாக திகழ்வதாகக் கூறி, நாட்டு மக்களுக்கு மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பொற்றோர்கள் கவனம்: நமது பண்டிகைகள் எப்போதும் இயற்கையுடன் தொடர்புடையவை. சுற்றுச்சூழல் மாசுபாடு தற்போது சர்வதேச கவலையாக உள்ளது. வேத காலம் முதல் பண்டிகைகள், இந்தியாவில் சமூகத்தில் தொடர்ச்சியாக மாற்றம் கொண்டு வந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களும் தங்களுக்கு இடையேயான வேற்றுமைகளை மறந்து நாட்டின் வளர்ச்சி ஒன்றையே நோக்கமாக கொண்டு செயலாற்ற வேண்டும். ஆபத்தில்லாத வகையில் தீபாவளியை கொண்டாடும் வகையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்கும்போது பெரியவர்கள் உடனிருந்து அறிவுரை கூறி கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
'சந்தேஷ்' திட்டம்: நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் நமது வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறும் பண்டிகையாக கொண்டாடுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 'சந்தேஷ்' திட்டத்துக்கு கிடைத்துள்ள அபார வரவேற்புக்கு மகிழ்ச்சி தெரிவித்த மோடி, ராணுவம், பிஎஸ்எப், சிஆர்பிஎப் வீரர்களின் தியாகங்கள் நமது மனதை தொடும் அவர்களை நினைத்து நாம் பெருமைப்படுகிறோம். நமது வீரர்களை நினைவுபடுத்த வேண்டிய நேரம் இது. நமக்காக தியாகம் செய்த வீரர்களுக்கு தலை வணங்குகிறேன். இந்த தீபாவளி பண்டிகையை அர்ப்பணிக்க வேண்டும்.
திறந்த வெளி கழிப்பிடம்: பல மாநிலங்கள் திறந்த வெளி கழிப்பிடத்தை மாற்ற பல நடவடிக்கை எடுத்துள்ளன. இமாச்சல பிரதேசம், சிக்கிம் முன்னுதராரணமாக உள்ளன. இதில், கேரளா விரைவில் இணையும். கேரளாவில் இதற்காக கடுமையாக உழைத்த மாணவர்களை பாராட்டுகிறேன்.
ஒற்றுமையுடன் நிற்க வேண்டிய நேரம்: ஏழை மக்களின் கவலைகள் தீர்க்கப்பட வேண்டும். ஏழைகளின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டிய நேரம் வந்துள்ளது அரியானா மாநிலம் மண்ணெண்ணை இல்லா மாநிலமாக மாறியுள்ளதற்கு பாராட்டுகள். ஆண் மற்றும் பெண் குழந்தைகள் வேறுபாட்டை நிறுத்த வேண்டும். நாளை படேல் பிறந்த நாள், இந்திரா நினைவுநாள் நாளை கொண்டாடுகிறோம். இந்த நேரத்தில் மக்கள் அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் நிற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நேரடி மானிய திட்டத்தின் மூலம், இடைத்தரகர்கள் பிரச்னை ஒழிக்கப்பட்டது என்று கூறினார் நரேந்திர மோடி.

சென்னை: கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் நவம்பர் 11-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் வெற்றிக்குப் பிறகு சிம்பு-கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் 'அச்சம் என்பது மடமையடா'. ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் எல்லாம் முன்னரே வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது . படம் எப்போது வெளிவரும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், இப்படத்தின் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், நவம்பர் 11-ந் தேதி 'அச்சம் என்பது மடமையடா' படத்தை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

கடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக கடந்த இரு நாள்களில் இதுவரை 126 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை 15 நாட்கள் சிறையில் அடைக்க கடப்பா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவின் திருப்பதி சேஷாசலம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் அதிகளவில் செம்மரம் கடத்தல் நடைபெற்று வருகிறது. செம்மர கடத்தலில் தமிழக எல்லையில் உள்ள சேலம், வேலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதையடுத்து செம்மர கடத்தலை தடுக்க ஆந்திர வனத் துறையினர், ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடப்பா மாவட்டம் லங்கமலை என்ற இடத்தில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக 83 தமிழர்களை ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்கள் அனைவரும் கூலித்தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து 42 செம்மர கட்டைகளும், 4 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட தமிழர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி கைது செய்யப்பட்ட 83 தமிழர்களையும் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் அனைவரும் கடப்பா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று கடப்பாவில் உள்ள வனப்பகுரியில் செம்மரம் வெட்டி கடத்தியதாக மேலும் 43 தமிழர்களை ஆந்திரா செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிகளிடம் 24 செம்மரங்கள் மற்றும் 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கடப்பாவில் செம்மரம் வெட்டியதாக நேற்று 83 தமிழர்களும், இன்று 43 தமிழர்கள் என இதுவரை 126 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். செம்மர கடத்தலில் தமிழக கூலித் தொழிலாளர்களும் கைதாவது தொடர் கதையாக உள்ளது.

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இதல் முதல் திடீரென மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
பொதுவாக தீபாவளி பண்டிகை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் வருவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பருவ சூழ்நிலை காரணங்களால் வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாகவே தொடங்கும் என வாணிலை ஆய்வு மையம் தெரிவித்து வந்தது.
காலம் காலமாக தீபாவளி பண்டிகையை மழையோடு கொண்டாடி மக்கள் வர்ணபகவான் கருணையால் நேற்று மழையில் குழந்தைகள், பெரியோர்கள் என அனைவரும் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
மாலை நேரங்களில் கோவில், திரையரங்குகள், சுற்றுலா தளங்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்தநிலையில் தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் நேற்று இரவு சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. இதனால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்க சாதகமான சூழல் உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்ய தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்றிரவு மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர், சென்ட்ரல், அண்ணா நகர் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் மழை பெய்தது. சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றததை காண முடிந்தது.
மழைக்காலம் தொடங்கவுள்ளதால், நகரில் சாலையில் மழை நீர் தேங்குவதை தடுக்கவும், மழை நீரால் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.
திருச்சி மாவட்டம் முசிறி மற்றும் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பெரும்பாலன இடங்களில் நேற்றிரவு முதல் இடி மின்னலுடன் மழை பெய்தது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சில மணி நேரம் மட்டுமே நடைபெற்ற வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
சாம்வத் 2072 என்ற பெயரில் இன்றைய சிறப்பு வர்த்தகம் நடைபெற்றது. வர்த்தகம் தொடக்கம் முதலாகவே, முன்னணி நிறுவனப் பங்குகளை விற்று, முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுப்பதில் ஆர்வம் காட்டினர்.
மறுபுறம், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனப் பங்குகளில், சில்லறை முதலீடுகள் அதிகரிக்கவே, பங்குச்சந்தைகளில் ஏற்றம், இறக்கம் கலந்தே காணப்பட்டது.
வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 26 புள்ளிகள் அதிகரித்து, 27,941 புள்ளிகளாக நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 23 புள்ளிகள் உயர்வுடன் 8,638 புள்ளிகளாக முடிவடைந்தது. 
தீபாவளியையொட்டி புதுக் கணக்கு தொடங்குவதை எடுத்துக் காட்டும் வகையில் பங்குச் சந்தைகளில் முகூர்த்த வணிகம் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு முகூர்த்த வணிகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

கடந்த சட்டசபை தேர்தலில், பணப்பட்டுவாடா புகாரில் அரவக்குறிச்சி,தஞ்சாவூர் தொகுதிகளின் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் கமிஷன். திருப்பரங்குன்றம் தொகுதியில் வென்ற அதிமுக எம்.எல்.ஏ சீனிவேல் மரணமடைந்தார். தஞ்சாவூர், அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளின் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. நவம்பர் 19-ம் தேதி இந்த மூன்று தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த மூன்று தொகுதிகளுக்கான வேட்புமனு தொடங்கியது.திமுக, அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்ட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு தனிச்சின்னம் ஒதுக்கப்படும்.
இந்த தனிச்சின்னம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அல்லது பொதுச் செயலாள்ர்கள் அல்லது கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவரின் ஒப்புதல் கடிதம் அளித்த பிறகே வேட்பாளர்களுக்கு அந்த கட்சியின் சின்னம் வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் போது, இந்த அத்தாட்சி கடிதத்தையும் வழங்கினால் தான் அங்கீகரிக்கப்பட்ட சின்னங்கள் வழங்கப்படும்.
இந்த அத்தாட்சிக் கடிதம், FORM-B எனப்படும்.இந்த FORM-B தேர்தல் நடத்தும் தொகுதியின் அதிகாரிக்கு வேட்பாளரால் வழங்கப்பட வேண்டும்.இந்த FORM-Bல் தொகுதியின் பெயர்,தொகுதியின் எண்,போட்டியிடும் வேட்பாளர் பெயர், வேட்பாளரின் தந்தையின் பெயர்,அவருடைய முகவரி ஆகியவை எழுதப்பட்டு கட்சித் தலைவரின் கையெழுத்துப்போட்டு அனுப்பப்படும்.
1989-ம் ஆண்டில் இருந்து அதிமுகவில் இந்த FORM-Bல் கையெழுத்துப்போடும் நபர் ஜெயலலிதாதான். மூன்று தொகுதிகளில் நிறுத்தப்பட்டு இருக்கும் அதிமுக வேட்பாளர்களுக்கு FORM-B தரப்பட்டு இருக்கிறது.இந்த FORM-Bல் ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லை.அதற்குப் பதிலாக அவருடைய விரல் ரேகை பதிக்கப்பட்டு இருக்கிறது.ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் பேராசிரியர் P.பாலாஜி,இதற்கு ஒப்புதல் அளித்து இருக்கிறார்.அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர் பாபு ஆப்ரஹாம் சாட்சிக் கையெழுத்து போட்டு இருக்கிறார்.
கையொப்பம் இடப்பட்ட நபர் தற்போது கிரீம்ஸ் ரோட்டில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் இருக்கிறார்.tracheostomy செய்து இருப்பதால்,அவ்ரது வலது கையில் கையெழுத்து இடமுடியாத நிலையில் இருக்கிறார்.ஆதலால் அவரது இடது கை கட்டைவிரலின் பதிவினை பெற்று இருக்கிறோம் என குறிப்பிடபட்டு இருக்கிறது.
ஜெயலலிதா கையெழுத்துபோடும் நிலையில்கூட அவரது உடல்நிலை இல்லை என்பதையே இது காட்டுகிறது
FORM-Bல் இன்னார் தான் கையெழுத்துப் போடுவார் என்பதை முன்கூட்டியே தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்து இருக்க வேண்டும்.அந்த அதிகாரத்தை வேறு ஒருவருக்கு மாற்றுவதாக இருந்தால், செயற்குழுவோ அல்லது பொதுக்குழுவோ கூடி முடிவெடுத்து அந்தத் தகவலை தேர்தல் கமிஷனிடம் அளிக்க வேண்டும்.அதன் பிறகு தான் வேறு ஒருவருக்கு FORM-Bல் கையெழுத்துப் போடும் அதிகாரம் மாற்றித் தரப்படும்.ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இன்னொருவருக்கு மாற்றித் தரும் சூழ்நிலை தற்போது இல்லை.

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.