கணினியின் Processor உற்பத்தியாளர்கள் அடுத்ததலைமுறை Microprocessor உற்பத்தியை தொடங்கி விட்டார்கள். சிலிக்கன் மூலப்பொருளால் உற்பத்தி செய்யப்படும் இந்த Microprocessor-ன் வேகமும் சிற்றளவாக்கமும் (miniaturization). அதன் எல்லையை அடைந்துவிட்டது. மேலும் ஒவ்வொரு 18 மாதத்திற்கு பிறகு Microprocessor-ன் கொள்ளவும் வேகமும் இருமடங்கு உயர்ந்து கொண்டேயிருக்கும் என்ற மூர்ஸ் விதி அதன் எல்லையை சென்றடைந்துவிட்டது. அதனால் இந்த சிலிக்கன் Processor-ஐ விட வேகமான புதியதொருபொருளை இதன் உற்பத்தியாளர்கள் தேடும்நிலை ஏற்பட்டது.


இதன்விளைவாக  நம்முடைய உடலிற்குள் இயற்கையாக இலட்சகணக்கில் உள்ள DNA மூலக்கூறுகள், இப்பொழுதுள்ள சிலிக்கன் Processor கணினியைவிட பலமடங்கு வேகத்திலும் கொள்ளளவிலும் அதிக திறன்வாய்ந்ததாக உள்ளன என்று அறியப்பட்டது. இந்த DNA மூலக்கூறுகளை ஒருங்கிணைத்து DNA Processor என்பது உருவாக்கபட்டு தற்போதைய கணினியைவிட பலமடங்கு வேகத்திலும் மிகச்சிறிய உருவிலும் வருங்காலத்தில் வெளியிடப்படவுள்ளன, அவ்வாறு உருவாக்கபடும் DNA கணினியானது தற்போதைய சிலிக்கன் Processor கணினியைவிட பில்லியன் மடங்கு அதிக நினைவக கொள்ளளவுதிறனும் வேகமும் கொண்டதாக இருக்கும்.

ரோசெஸ்டர் பல்கலைகழகத்தில் ஆடில்மேன்ஸ் தலையமையில் விஞ்ஞானிகள்குழு ஒன்று இந்த DNA உயிர் மூலக்கூறை அடிப்படையாக கொண்ட லாஜிக்கேட்டை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர் தற்போது சிலிக்கன் ட்ரான்ஸிஸ்டர் வாயிலாக லாஜிக்கேட்டில் வரும் மின்சைகைகள் உருமாற்றபட்டு கணினியின் சிக்கலான கணக்கீடுகளுக்கும் செயல்களுக்கும் பயன்படுத்தபடுகின்றன ஆனால் இந்த DNA உயிர் மூலக்கூறை அடிப்படையாக கொண்ட கணினியில் ஜெனடிக்கேட் எனப்படும் அன்டுகேட் பயன்படுத்த படவுள்ளது இதில் உயிர்பொருளே உள்ளீடாகவும் DNA உயிரமூலக்கூறில் ஏற்படுத்தபடும் வேதிமாற்றமே சைகைகளாகவும் கொள்ளபட்டு செயற்படுத்தபடுகின்றது.

இந்த டிஎன்ஏ உயிரமூலக்கூறு கணினியின் பயன்கள் பின்வருமாறு...

1.அதிகஅளவு DNA உயிர்மூலக்கூறு இயற்கையில் கிடைப்பதால் கணினியின் உற்பத்தி விலை மிககுறைந்த அளவாகவே இருக்கும்

2.இந்த DNA உயிர்மூலக்கூறினால் உற்பத்திசெய்யபடும் கணினியால் சிலிக்கன் Processor-ல் உற்பத்தி செய்யபடும் கணினி போன்று சுற்றுசூழல் பாதிக்காது.

3.இந்த DNA உயிர்மூலக்கூறினால் உற்பத்திசெய்யபடும் கணினியினாது தற்போதைய கணினியைவிட உருவ அளவில் மிகமிகசிறியதாக இருக்கும்

4.ஒருபவுன்டு DNA உயிர்மூலக்கூறானது தற்போதைய மின்னோட்ட கணியைவிட பலமடங்கு கொள்ளளவு திறன்கொண்டதாகும்

5.DNA உயிர்மூலக்கூறின் லாஜிக்கேட்டானது தற்போதைய Supercomputer-ஐ விட அதிக திறன்வாய்ந்ததாகும்

6.ஒருகனசென்டிமீட்டர் DNA உயிர் மூலக்கூறானது 10 டிரில்லியன் அதாவது 10 டெராபைட் கொள்ளளவு திறன்கொண்டதாகும்

7.தற்போதைய மின் கணினியானது ஒருசமயத்தில் ஏதேனுமொரு பணியை மட்டும் செய்யகூடியதாகும் ஆனால் இந்த DNA உயிர்மூலக்கூறு கணியானது ஒரேசமயத்தில் பலசெயல்களை இணையாக செய்யகூடியது அதனால் மிக சிக்கலான கணக்கீடுகளை ஒரிருமணிததுளிகளில், இது செய்யும் செயலை தற்போதைய கணினியானது தீர்வுசெய்ய பலநூறுஆண்டுகளாகும்.